தமிழ் இலக்கணம் (Tamil Ilakkanam)





மொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும்,அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம்மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது, இலக்கணம் ஆகும். முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் (செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி) இலக்கணத்தை விளக்க உதவுகிறது.



இலக்கண வகைகள்
(Ilakkana Vagaigal)
  • எழுத்து
  • சொல்
  • பொருள்
  • யாப்பு
  • அணி











எழுத்திலக்கணம்

(Eluthu Ilakkanam)



எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும் எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும். எழுத்து - மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது. ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கின்றது. வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது. எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,
  1. 1. முதல் எழுத்து
  2. 2. சார்பு எழுத்து

எழுத்து இலக்கணம் வகைகள்

(Eluthu Ilakkanam Vagaigal)

  • எழுத்து
    • முதலெழுத்து
      • உயிரெழுத்துகள்
      • மெய்யெழுத்துகள்
    • சார்பெழுத்து
      • உயிர்மெய்
      • ஆய்த எழுத்து
      • உயிரளபெடை
      • ஒற்றளபெடை
      • குற்றியலுகரம்
      • குற்றியலிகரம்
      • ஐகாரக் குறுக்கம்
      • ஔகாரக் குறுக்கம்
      • மகரக்குறுக்கம்
      • ஆய்தக்குறுக்கம்
முதலெழுத்துக்கள்

சார்பெழுத்துக்கள்

No comments:

Post a Comment

Popular Posts