அம்மா




அம்மாவின் அன்பு

அம்மா என்ற சொல்லே 
நானறிந்த வேதம் 
அவளின் பாதம் 
வணங்கினாலே போதும் 
தேவையில்லை வேறேதும் 
எத்தனை தெய்வங்கள் வந்தாலும் 
வரங்கள் கோடி தந்தாலும் 
ஒரு தாயின் அன்புக்கு ஈடாகுமா 
அவளின் தியாக சேவைக்கு நிகராகுமா... 
பாரில் உள்ள அனைத்தும் 
அவள் பாத மண்ணுக்கு இணையாகுமா... 
அவளின்றி அமையாது இவ்வுலகம்



அம்மா

இந்திரனை பெத்தாயோ 
இல்லை 
சந்திரனை பெத்தாயோ 
சுந்தரிய பெத்தாயோ 
இல்லை 
கந்திரிய பெத்தாயோ 
அத்தனையும் தங்கமம்மா 
உனக்கு 
ஆரணங்கு சொந்தமம்மா 
கண்ணுறக்கம் கண்டாலும் 
இல்லை 
கால்வலிக்கு நொந்தாலும் 
உன்னுறக்கம் தான் தொலைச்சி 
என்னை 
உயர்வாக மதிச்சவளே 
சொல்லெடுத்து நான் படிக்க 
சோறு தண்ணி நீ மறந்த - 
நான் 
பட்டம் வாங்கி பாக்கனும்னு 
பகலிரவை நீ தொலைச்ச 
தினம் 
கூலி வாங்கி கூலு வெக்க 
நெல்லுமணி போதலையே 
தாலி வெச்ச தங்கத்தையும் 
தானமாக தந்தவளே 
பட்டம் வாங்கி வந்துவிட்டேன் 
பாச மகன் வென்று விட்டேன் 
கந்தல் துணி நீயான 
கலெக்டரென நானானேன் 
ஊருலகம் வாழுதுன்னா 
உன்னைப்போல் தாயாளே 
தியாகம் என்ற சொல்லிருந்தா 
போதாது போதாது 
அர்ப்பணிப்பு என்று சொன்னா 
ஆகாது ஆகாது 
பெத்தவள பெத்தெடுத்து 
பிறவிப் பயன் தீர்த்தால்தான் 
பெண்ணருமை கண்டுணரும் ... 
ஆண்கள் சனம் அடி உணரும்... 

மறப்பாயோ கண்ணே

அன்றோ ! 
அடிவயிற்றில் எட்டி உதைத்த மகனே 
அவ்வலியினை பேரின்பம் என்றேன்... 
வாயிற்படி இருந்து உதைக்கும் இன்றோ 
பேதை உள்ளம் வாடுதடா கண்ணே...! 

சோறு ஊட்டி வளர்த்தேன் 
என் கண்ணே ! – ஒரு கை 
சோறு போடா மறுப்பதென்ன...? 
என் கண்ணே ! 

தாலி கட்டி வந்த பெண்ணை 
தாரம் என்று ஏற்ற பிறகு 
தாயுள்ளம் மறந்ததேன்ன...? 
என் கண்ணே ! 

பாடுபட்டு படிக்க வைத்தேன் 
என் கண்ணே ! – நீயோ 
பார்க்காது போல் நடந்து செல்வதென்ன...? 
என் கண்ணே ! 

பார்கின்ற போதெல்லாம் 
பாசமாய் பார்த்தேன் 
என் கண்ணே ! – ஆனால் நீயோ 
பாநஞ்சாய் பார்பதேன்னவோ...? 
என் கண்ணே ! 


No comments:

Post a Comment

Popular Posts