நட்பு கவிதை -friendship quotes

நட்பு கவிதை -friendship quotes


Natpu Kavithai

1. Natpu Kavithai 

ஓரு பெண்ணை காதலித்தேன்,நண்பனை மறந்தேன்.
ஒரு நாள் விபத்து,உயிர் போகும் நிலை.
காதலி வந்தால் முத்தம் கொடுத்தால்,
நண்பன் வந்தான் ரத்தம் கொடுத்தான்

2. Natpu Kavithai


நமக்கென்று ( நண்பர்கள் ) கொண்டாட ஓருதினமாம்...
நாம் தினம் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது...





நட்பின் மடியில் அமைதியாய் உறங்கும்
ஆயிரம் கோடியில் நானும் ஒருத்தி

முகம் காணாமல் முகவரி அறியாமல் இணைந்த போதும்
அகத்தில் அழியா தடம் பதித்து நிலைத்துவிட்டோம்.

பலரின் பெயர் கூட தெரியாமல் 
நட்பெனும் ஓரே பெயரால் வாழ்கிறோம்.

தாய்மைக்கு நிகராக நிற்கும்
நட்புக்கு ஈடு எவ்வுலகிலும் இல்லை.

அகவைகள் ஐம்பதை கடந்தாலும்
துள்ளும் மழலையாய் நமை மாற்றிடும் உறவிது.

அழும் போது ஆறுதல் சொல்ல 
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்

அழவே விடாத நல் நட்பில் 
நாம் தொலைந்து போகின்றோம்..!!!

3. Natpu Kavithai

கவிதை தோற்கடிக்கபட்டது

என் தோழி
என்னை
திட்டும்போது...

4. Natpu Kavithai 

இந்த பதிவு சரியா,தவறா என தெரியவில்லை..

தோழி..

எனது குற்றமில்ல நட்புடன்..
சிறிதும் காமம்இன்றி ..
உன்னை கட்டி தழுவவேண்டும்..
உன்மடியில் ஒரு பொழுது கண்ணுறங்க வேண்டும்..

மனதில் உதித்தது யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..
 

5. Natpu Kavithai

நட்பு...!
ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர்
வரும்
போது,

இன்னொருவருடைய கண்களில்
இருந்து கண்ணீர்
வந்தால்

அந்த உறவைவிட இந்த உலகத்தில் பெரிய
உறவு
இல்லை...
 

6. Natpu Kavithai

உண்மையான நட்பு இப்படியிருக்கும்.

உள்ளத்தில் உள்ளதை சொல்லத்துடிக்கும்.
துடித்தனொடியில் சொல்லியே தீரும்.
வரும் விளைவுகள் எதையும் தாங்கும்.
வலிகள் வந்தால் மருந்தாய் மாறும்.
இனிமை வந்தால் அமிர்தமாய் மாறும்.
நன்மை தீமைகள் நன்றாக உணரும்.
நான் விழுந்தாலும் என்னை விழுத்தாது...

7. Natpu Kavithai

எல்லா பெண்ணுக்கும் ஒரே ஆசை தான்..ஓர் ஆணிண்"ஒரே ஒரு ப்ரியமானவளாய்"இருந்துவிட வேண்டுமென்று!!

8. Natpu Kavithai

ஆயிரம் காதல் கூட தவறில்லை...
ஆசைக்கு ஏங்காமல் அன்பிற்காக ஏங்கும் போது...

9. Natpu Kavithai

ஒருவரை பற்றி தெரிந்து கொள்வதை விட
அவர்களை புரிந்துகொண்டால் தான்
"அன்பு" ஆயுள் வரை நீடிக்கும்..
 
 
 
 

10. Natpu Kavithai

பாசம் என்பது நாம் யாருகிட்ட எதிர்பார்க்கிறோமோ அவங்ககிட்ட இருந்து கண்டிப்பா நமக்கு கிடைக்காது... ஆனா யாருக்கிட்ட இருந்து அந்த பாசம் கிடைக்குதோ அவங்க கிட்ட இருந்து நாம அத எதிர்பார்த்திருக்கவே மாட்டோம் 

11. Natpu Kavithai

நட்பு கிடைத்தவர்களுக்கு
தெரியாது.. கிடைக்காதவர்களுக்கு
புரியாது..தொலைத்தவருக்கு தான்
தெரியும் அருமை....!
 

12. Natpu Kavithai

எத்தனை உறவுகள் இருந்தாலும் ...நட்பு நீ மட்டும் ஒரு நொடி இல்லை என்றால் ...
நான் ஒரு அநாதை..
  

13. Natpu Kavithai

பாசம் வைப்பது தவறல்ல...
அதை தவறானவர் மேல் வைப்பது தான் தவறு...
தவறென்று தெரிந்த மறு நொடி திருத்த நினைக்கையில்
தவறி போவது பாசம் மட்டுமல்ல பாசத்தை பகிர்ந்த எம் இனிய இதயமும் தான்...
பாசங்கள் மாறினும் காயங்கள் மாறாது
 

14. Natpu Kavithai

நம்மை சுற்றி ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் நம்மை
புரிந்து கொள்ளவும் நம் சோகத்தை
பகிர்ந்து கொள்ளவும் 
ண்ன்
இல்லையெனில் நாமும்
அனாதை தான்....
  
 

15. Natpu Kavithai 

நட்பு ..!!

என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....

நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...

வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்..

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்..

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...

No comments:

Post a Comment

Popular Posts