காதல் கவிதை -7

காதல் கவிதை


kavithai in tamil


1. Kavithai in Tamil 

உன் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் ...
என் இதயம்
என்றுமே அதை ஒரு சுமையாக நினைக்கவில்லை.....
சுகமான அந்த கனங்கள்
சுருக்கமாகவே கழிந்து விட்டது.....
ஆனாலும் நெருக்கமான உன் நினைவுகளை  
2. Kavithai in Tamil 

நீ பிரிந்து செல்லும் போது தான்
நான் புரிந்து கொள்கிறேன் .........
நீ அறிந்தவைகளை எல்லாம்
நான் அறிந்திருக்கவில்லை என்று ..
 
3. Kavithai in Tamil 

உதிரத்தில் கலந்துவிட்ட
உன் நினைவுகள் ............
என் உறக்கத்தையும் பறித்துவிட்டது
உயிரினில் வரைந்துவிட்ட
உன் உருவத்தை
என்றும் உதிராமல் வைத்திருப்பேன் 
என் உயிரோடு .........
உலகமே நீதான் என்றிருக்கும்
எனக்கு உணர்வுகளும் நீதான் ............
என்பதை இப்பொழுதுதான்
நான் உணர்ந்துகொள்கிறேன் உயிரே
  
4. Kavithai in Tamil 

கசப்பான உண்மைகளுக்கு
கண்கள் சொல்லும் பதில்தான்
கனமான இந்த கண்ணீர்த்துளிகள் .........
ஊமைகளின் வார்த்தைக்கும்
உண்மையான பாசத்திற்கும்
உலகம் சொல்லும் மொழி தான் மௌனம்!
மௌனங்கள் எப்பொழுதும்
எண்ணங்களின் வண்ணங்களே..
 
5. Kavithai in Tamil 

இமைகள் தேடும் இறுதிப் பயணம்
இன்று என் இதயத்தின் இரண்டு வினாடித் துடிப்பில்
இருபது கோடி நினைவுகளுடன்
நின்று விடப்போகிறது.....
உன் நிஜமான அன்பின்
அழகான மௌனத்தில்........
ஆயுள் வரை வாழ ஆசைதான்....
ஆனால்,
விதியின் கைகளில்
விலங்கிடப்பட்டிருக்கும்
என் வாழ்க்கை என்றுமே ஒரு
வறண்ட பாலைவனம் தான்.....
  
6. Kavithai in Tamil 

அறியாத ஒருவனிடம்
அழகான என் வாழ்க்கையை
புரியாமலே ஒப்படைப்பதை விட....
அனைத்தும் அறிந்த உன்னிடம்
கண்களை மூடிக்கொண்டு
கடைசி வரை வாழ நான் தயார்.....
உன் மீது உள்ள நம்பிக்கை
என் உயிர் மீது கூட எனக்கில்லை.....
தந்தையின் தன் மானத்திட்காகவும்
அன்னையின் அதட்டல்களுக்காகவும்
என் வாழ்க்கையை அறியாத ஒருவனிடம்
அடகு வைக்க என்னால் முடியாது......
நான் காதலித்த நீ மட்டுமே எனக்கு
கணவனாகவும் வர வேண்டும்.....
இல்லையென்றால் என் இதயம் துடிப்பதை நிறுத்தி விடும்
உன் பெயரின் இறுதி எழுத்தோடு
 
7. Kavithai in Tamil 

என் மௌனத்தை உடைத்து விட
உன் வார்த்தைகளில் இருந்து வந்த
வண்ணங்கள் இன்று
என் வாழ்க்கையில்
வரங்களாக மட்டுமல்ல.....
புன்னகையாகவும் தான் ....
 
8. Kavithai in Tamil 

சோகங்களே மேகங்களாகும் போது
சொந்தங்களும் தூரமாகி விடுகின்றது.........
என் கவலைகளை கரைத்து விடும் சக்தி
கண்களுக்குத்தான் உண்டு என்றால்......
கண்ணீரை கடன் வாங்க
நான் கடல் கடந்து செல்லவும் தயார்.....
காரணமின்றி வரும் கஷ்டங்களும்
கை நழுவிப்போன காலங்களும்
காலத்தின் கோலங்களே !  
9. Kavithai in Tamil 

வழியினில் வந்த நீ என்
வாழ்வினில் தந்த வலிகள்
இன்று என் விழிகளில் வழிகின்றது .......
கண்ணீர் துளிகளாக.....
இரு விழிப்பார்வையும்
ஒருவனின் வருகைக்காக
வலிகளையும் மறந்து
விழிகளைத் திறந்து
காத்துக்கொண்டிருக்கின்றது......
ஆனால்
கழிந்து கொண்டிருப்பது நாட்கள் மட்டும்தான்....
அதில் அழிந்து கொண்டிருப்பது என் வாழ்க்கையும் தான்...
  
10. Kavithai in Tamil        

கண்களை மூடினால் வரும்
கனவுகளை விட
கண்களை திறந்திருந்தால் வரும்
உன் நினைவுகள் தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 

No comments:

Post a Comment

Popular Posts