காதல் காதல்தான்





என் பெயர் மதன். நான் படித்ததுதனியார் கல்லூரியில் கணினி பொறியியல் துறையில் டிகிரி முடித்தேன், ஆனால் வேலை என்னவோ தனியார் நிறுவனத்தில் கணகாய்வாளர். படித்த வேலை கிடைக்காதலால் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன். இப்படி தான் என் வாழ்வில் பல விஷயங்கள் நான் ஆசை பட்டது கிடைக்கவே இல்லை. நான் படிக்க நினைத்தது சிவில் இன்ஜினியரிங், முடித்து கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் செய்வதோ அக்கௌன்டன்ட். நான் அதிகம் எதிர்பார்த்து வாழ்வில் ஏமாந்ததுதான் அதிகம். எது எப்படியோ வாழ்வில் எதுவும் எனக்கு ஆசை பட்டமாதிரி இல்லாவிட்டாலும் ஒரு கணம் ஆசை பட்ட மாதிரி வாழ்க்கைத் துணைவி அமைந்தாலே வாழ்வில் அடைந்த ஏமாற்றங்களுக்கு ஒரு விமோர்சனம் கிடைக்கும் என்றிருந்தேன். கல்லூரியில் படிக்கும் பொது எனக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அதுவும் ஒரு வழியாக ஊத்திக்கொண்டது. அதிலிருந்து மீளவே பல ஆண்டுகள் ஆனது. ஆக மொத்தத்தில் மனசுக்கு பிடிச்ச பெண்ணை கண்டால் உடனே கல்யாணம் தான் என்ற முடிவில் இருக்கிறேன். 

இன்று அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்ததுதான், "ஆஹா" "ஓஹோ" ன்னு ஒரு பெண்ணை பற்றி புகழ்ந்து தள்ளி கிட்டு இருந்தார்கள். "என்னடா இது நேற்று ஒரு நாள் தான் வேலைக்கு மட்டம் போட்டேன் அதுக்குள் எவளோ இவர்களை புலம்ப வைத்து விட்டாலே" என்று மனதுக்குள் நினைத்து கொண்டே அவர்களை அணுகி, 

"என்னடா நடந்தது நேற்று" என்று சங்கரிடம் கேட்டேன். அப்பொழுதுதான் தெரிந்தது நேற்று பெண் குமாஸ்தாவுக்கான நேர்முக தேர்வு நடந்திரிகிறது என்று. "ஆம் ஒரு வாரத்திற்கு முன்னாள் நேர்முக தேர்வு நடக்க விருப்பதாக ஓர் அறிக்கை தலைமையகத்திலிருந்து வந்திருந்தது நினைவுக்கு வந்தது. 

"டேய் மதன் நேற்று நீ வேலைக்கு வராததால் ஒரு நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டே தெரியுமா மதன்". உடனே பக்கத்தில் இருந்த குமாரும் "ஆமாண்டா மதன், என்ன பொண்ணுங்க, அதிலும் சுந்தரி என்ற பொண்ணுக்குத்தான் கண்டிப்பா வேலை கிடைக்கும்னு நினைக்கிறேன் மதன்" என்றான். 

"ஏன்டா அவள் ரொம்ப அழகா இருந்தாளா?" என்றேன். ஷங்கர் அதற்கு "ஆமான்டா மதன் செதுக்கி வச்ச சிலை போல இருக்கிறாடா" என்றான். "அது இருக்கட்டும் அவளுக்கு தான் வேலை கிடைக்கும்னு நீங்களும் நம்பறீங்களா" என்றேன். "அது என்னவோ எனக்கு தெரியாது, நேர்முக தேர்வுக்கு வந்தவங்க ஒரு பத்து பேர் இருப்பாங்க, அதில் அவள்தான் அழகோ அழகு" என்றான் ஷங்கர். 
"டேய் வேலைக்கு அழகா இருக்கணும்னு அவசியம் இல்லைடா, திறமைதான் முக்கியம், இப்போ நான் உள்ளே போறேன் நேர்முக தேர்வில் உங்களோட அழகி என்ன கிளிசிருக்கான்னு பார்கிறேன்" என்று என் அரையின் கதவை திறந்து என் மேசைக்கு வந்தேன். என் மேசையில்தான் புள்ளி பட்டியலை வைத்திருப்பார்கள். மனதில் அவர்களை கழுவி கழுவி ஊத்திக்கொண்டே, "ஏதோ ஒரு மொக்க பிகுரே பார்த்துவிட்டு ஜொள்ளு விடுரனுங்கே, மொக்க பசங்க". என் இருக்கையில் அமர்ந்து, சுந்தரி என்ற பெண்ணுக்காக இப்படி உருகின்றனரே, அவள் எப்படித்தான் இருக்கிறாள் என்று என் மேசையில் உள்ள நேர்முக தேர்வின் புள்ளி பட்டியல் விபரத்தை எடுத்து பார்த்தேன், மற்றவர்களை விட சுந்தரிதான் அதிக புள்ளிகளை பெற்று இருந்தாள். அவளின் சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டிருந்ததை பார்த்தேன். மிகவும் திறமைசாலியாகத்தான் தெரிந்தது. அவளுடைய புகைப்படத்தை பார்த்தேன், செதுக்கி வைத்த சிலை போலத்தான் இருந்தாள். அழகி மட்டும் அல்ல கேட்டிகரியும் கூட. 

சிறிது நேரத்தில் அலுவலக தொலைபேசி ஒலித்தது. எடுத்து "ஹெலோ" என்றேன். எதிர்முனையில் மேனேஜர், "மதன் நேற்று நடந்த நேர்முக தேர்வில் சுந்தரி என்ற பெண்ணை தேர்வு செய்திருக்கிறோம். அவங்களை என்னுடைய தனிப்பட்ட செயலாளராக நியமித்து உள்ளேன், அதன்படி நியமன கடிதம் ஒன்று கொடுத்துவிடுங்கள் மதன்" என்றார் மேனேஜர். சரி சொல்லி விட்டு தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் ஒருமுறை அவளின் புகைப்படத்தை பார்த்தேன், சும்மா தமிழ் பட ஹேரோயின் காஜல் அகர்வாலை இருகிறாளே, எவன் கொடுத்து வைத்து வனோ இவளை கல்யாணம் கட்டிக்கிட்டு குடும்பம் நடத்த. 

"சத்தியமா நீ இல்லடா மதன்" என்று ஒரு குரல் பின்புறமாக ஒலித்தது. 'எவண்டா இது சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி" என்று திரும்பி பார்த்தால் குமாரும் ஷங்கரும். "டேய் நீங்க எப்படா உள்ளே வந்திங்க" என்றேன். 

அதற்கு ஷங்கர், நீ சுந்தரி புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டப்பவே வந்துட்டோம்". 

"சரி நான் மனசுக்குள் பேசினது உங்களுக்கு எப்படி டா கேட்டது" என்றேன். 

"அப்படின்னு நினைச்சு சத்தமா பெசுனடா என் டுபுக்கு" என்றான், உடனே குமாரும் ஜோக் அடிச்சபடியே "என்னடா வித் படத்துல வர விவேக் மாதிரி ஆயிட்டே" என்றான். நானும் சிறப்பை அடக்க முடியாமல் சிறிது விட்டேன். 

சுந்தரி வேலைக்கு வரும் நாள் இன்று, வந்ததும் என் அரை கதவை தட்டினாள். நான் உள்ளே வாங்க என்றேன். காலை வணக்கம் என்று இரு கரம் கூப்பி தமிழ் பண்பாட்டில் வணக்கம் கூறியதும் நான் மெய் மறந்தே போனேன். சார். மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வந்தாள். 

"என்ன சார், அப்படி பார்க்கிறிங்க" என்றாள். 

"இந்த காலத்தில இப்படி ஒரு தமிழ் பண்பாடு நிறைந்த பெண்ணை என்று வியக்கிறேன்" என்றேன். 

"சார், இன்று எனக்கு வேலைக்கு இங்கு முதல் நாள் அல்லவா, அதனால் தான் சார் கொஞ்சம் அடக்கமா வந்திருக்கிறேன், உண்மையில் நான் ரொம்ப மோடன் டைப் சார்" என்றாள். 

"அப்படி என்றால் போக போக இந்த மரியாதை எல்லாம் இருக்காது என்கிறிர்களா", என்று புன்னகை சிந்திய படியே கேட்டேன். அவளும் சிரித்தாள், நானும் சிரித்துவிட்டேன். 

"உங்களின் வேலை மற்றும் இதர விசயங்களை பற்றி குமார் உங்களுக்கு வழி நடத்துவார், நீங்கள் பொய் குமாரை பாருங்கள்" என்று அனுப்பி வைத்தேன். அவள் சென்ற பிறகு என் இருக்கையில் அமர்ந்தேன், சுந்தரி பேசினது அவளின் குறும்பு தனம் அனைத்தும் என் முன்னாள் காதலி ரம்யாவை நினைவு படுத்தியது. பல முறை முகநூலில் ரம்யாவை தேடி பார்த்தேன். அவள் கிடைக்கவேயில்லை. அவள் முகநூல் வைத்து இருப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. எனது கல்லூரி நண்பர்களின் முகநூளில் கூட தேடி பார்த்தேன், ரம்யா இருபதாக தெரியவில்லை. 

"மதன் இன்று ஆங்கில கழகத்தின் சந்தித்தல் கூட்டம் உள்ளது, மறவாமல் வரனும். ஆங்கில கழகம் நமது கல்லூரியில் மிக குறைவான உறுப்பினர்களே உள்ளனர். இந்த வருடம் தலைவர் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன் மதன், நீ எனக்கு ஒத்துழைக்க வேண்டும் மதன். அதிக உறப்பினர்களை திரட்டினால் நமது கல்லூரியை பிரதிநிதித்து போட்டிக்கு தேர்ந்தெடுப்பதாக பேராசிரியர் யோகேஸ்வரி வாக்கு கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா மதன். அதுமட்டும் இல்லாமல் நிதி உதவியும் பெற்று தருவதாக கூறி இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை நாம் நழுவ விட கூடாது, செயலாளர் பொறுப்புக்கு உன்னைத்தான் நியமித்து இருக்கிறேன்” என்றாள். 

“ரம்யா நான் கூட்டத்துக்கு வருவதெல்லாம் உன் கையில் தான் இருக்கு. எனக்கு ஆங்கிலம் கொஞ்சம் முட்டும், நீ வேறு என்னை செயலாளராக நியமித்து விட்டாய், பேசும் பொழுது நீதான் அப்பப்ப வார்த்தைகளை எடுத்து கொடுக்கணும், சரியா ரம்யா” என்றேன். சரி என்று சிரித்தாள் ரம்யா. அவள் கூட நடந்து கொண்டே மனதுக்குள், கடவுளே இவளை மடக்குவதற்காக எக்கு தப்பா ஆங்கில கழகத்தில் மட்டிகிட்டேனோ? இருந்தாலும் காதலில் இதெல்லாம் சாதரணமப்பா” என்று நினைத்து கொண்டேன். 

திடீரென்று அலுவலகத்தின் வெளியே ஒரு சத்தம். என் அரை கதவை திறந்து சென்று பார்த்தேன், சுந்தரி ஷங்கரை கோபமாக திட்டி கொண்டிருந்தாள். நான் வேகமாக சென்று சுந்தரியை சமாதான படுத்தி இருக்கைக்கு அனுப்பி விட்டு, திரும்பி குமாரையும் ஷங்கரையும் அழைத்துக்கொண்டு சிற்றுண்டி சாலைக்கு வந்தேன். ஒரு கப் காப்பி சொல்லிவிட்டு, 
“என்னடா நடந்தது ஷங்கர்”? என்றேன். 

“டேய் மதன் பொண்ணாடா அவ” நொந்து கொண்டான் ஷங்கர். 

“என்ன ஆச்சு” என்றேன். 

அதற்கு குமார், “வழக்கம் போல ஜொள்ளு விட்டான், அதான் மாட்டிகிட்டான். ஆமாண்டா நீ அவளை என் கிட்டே அனுப்பி வச்சே, அவ குமார் யாருன்னு ஷங்கர் கிட்டே வந்து கேட்டா, இவன் உடனே தான் தான் குமாருன்னு புருடா விட்டான் ஜொள்ளு விடுறதுக்காக, அதற்குள்ள ஒபெரடோர் சத்யா சிறிசே காட்டி கொடுத்திட்டா. உடனே ருத்ர தாண்டவம் ஆடிட்டா” என்றான். 

“என்னடா ஷங்கர் இதெல்லாம்” என்றேன். 

“சும்மா ஒரு ஜாலிக்கு தான்” என்றான். 
“டேய் பாத்துடா ஷங்கர், சுந்தரி பெரிய கோபக்காரியா இருப்பா போல” என்றேன். 

வேலை முடிந்து வீடு திரும்பிய பின்பும் சுந்தரி பற்றிய எண்ணம்தான். என் நினைவலைகள் ஓடியது. சுந்தரி நடந்து கொண்ட விதம் யாரும் அவளை நெருங்க முடியாதுன்னு தெரியுது. இப்படி பட்ட கண்டிப்பான ஒருத்தி என் வாழ்வில் வந்தாள் சந்தோசமா இருக்கும் அல்லவா. கோவம் இருக்கும் இடத்தில தான் குணமும் பாசமும் இருக்கும். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அவள் மனதை புரிந்து கொண்டு அவள் சம்மதத்துடன் பெண் கேட்டு அவங்க வீட்டுல போய் நிக்க வேண்டியதுதான். இப்படியே நாட்கள் ஓடின. ஷங்கரும் முதல் நாளில் நடந்த கலவரத்திலிருந்து சுந்தரியை கண்டு கொள்வதே இல்லை. குமார்தான் சுந்தரிக்கு எல்லா வகையிலும் ஒத்துழைத்தான். குமாரும் அவளை ஜொள்ளு விடுவதில்லை அந்த முதல் நாள் சம்பவத்திலிருந்து. சுந்தரி என்னுடன் நெருக்கமாகவும் ஆகிவிட்டாள். நாங்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். பல நாள் வெளியில் இரவு உணவு உண்பதுண்டு. இன்றும் எப்போதும் போல சுந்தரியுடன் இரவு உணவு உண்பதற்கு உணவகத்திற்கு வந்தோம். 

அப்பொழுது அவள் என்னிடம், “மதன் நான் ஒருத்தரை காதலிக்கிறேன்” என்றாள். 

எனக்கு ஒரு பக்கம் ஈர குழையே ஆடி போய் விட்டது. யாரவன் என்று அதிர்ச்சியோடு கேட்டேன். உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான் என்று வெட்கத்துடன் தலை குனிந்தவாறே சொன்னாள். உங்கள் சம்மதமும் உங்கள் அம்மாவின் சம்மதமும் இல்லாமல் என் கல்யாணம் நடக்காது, விரைவில் அம்மாவிடம் கூறி பெண் கேட்டு வாருங்கள் என்றாள். இதை விட வெளிப்படையாக ஒரு பெண்ணால் கூற முடியாது என்று அதிகம் வெட்கப்பாட்டாள். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. 

என்னையும் ஒருத்தி லவ் பன்றாலா என்று ஒரு கணம் ஷாருக் கான் போல என்னை நான் உணர்ந்தேன். “போலே சூடியா, போலே கங்கனா, ஹே மெயின் ஹோய் மெயின் ஹோ கையே, யாரீ சஜ்னா, என்று அவளை கஜோல் என நினைத்து டூயட் பாடுவதை போல் மனதுக்குள் ஒரே குதூகலம். சிறிது நேரம் உரையாடிவிட்டு இருவரும் கிளம்பினோம். வீடு திரும்பியதும் அம்மாவிடம் நடந்ததை கூறி பெண் கேட்க நல்ல நாள் பார்க்க சொன்னேன். 

மறுநாள் ஷங்கரை சந்தித்து, “ஷங்கர், நேற்று நானும் சுந்தரியும் வெகு நேரம் பேசினோம், அப்போ அவ காதலை சொன்ன, நல்ல நாள் பார்த்து பெண் கேட்டு வர சொன்னா, “நீ என்ன நினைக்கிறாய் ஷங்கர்” என்றேன். 

“உனக்கு சம்மதம்னா நான் என்னத்த சொல்வது, அவள்தான் உன்கிட்டே சொல்லிவிட்டல்தானே” என்றான். 

“இதில் உனக்கு வருத்தம் எதுவும் இல்லையே” என்றேன். இல்லை என்று தலையாட்டினான் ஷங்கர். நல்ல நாளன்று பெண் கேட்க ஷங்கரும் கூட வந்திருந்தான். 

ஷங்கருக்கு எல்லாமே என் அம்மாதான். சிறு வயதிலே தாயையும் தந்தையும் இழந்தவன். அவனின் அப்பாவும் என் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள், அந்த வகையிலே அனாதையான ஷங்கருக்கு என் அப்பாதான் ஆதரவாக அடைக்கலம் கொடுத்தார். என் அப்பா இறந்த பின் ஷங்கருக்கு நானும் என் அம்மாவும் தான் எல்லாம். 

எனக்கு ஒரே சந்தோசம். சுந்தரி வீட்டின் இருக்கையில் நான் சுந்தரியை பெண் கேட்டு. சுந்தரியின் வருகைக்காக நான். சுந்தரி நாணத்துடன் என் முன்னால், மாப்பிளைக்கு பெண்ணை புடிச்சிருக்கா என்று பெண் வீட்டார் கேட்க நான் புடிச்சிருக்கு என்றேன். சற்று நேரத்தில் சுந்தரி முகத்தில் கலவரம். ஒரு வகையாக எல்லாம் முடிந்து வீட்டுக்கு சந்தோசமாக திரும்பினோம். ஷங்கர் முகத்தில் முதலில் இருந்த சந்தோசம் இபோழுது இல்லை. 

அன்றிரவு சுந்தரி எனக்கு அலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு ஓர் இடத்துக்கு வரச்சொன்னாள். நானும் துள்ளி குதித்து போனேன் காதல் செய்ய, அங்கே நடந்த காட்சியை கண்டவுடன் அதிர்ச்சி. ஷங்கரின் தோளில் கண்ணீருடன் சுந்தரி. சுந்தரி என்னை கண்டதும் கண்ணீரை துடைத்து கொண்டு அவர் உங்களிடம் நடந்ததை சொல்வார் என்று அவ்விடத்தை தொலைவாகக் நின்றாள். 

“ஷங்கர் இங்கே என்ன நடக்குது” என்றேன். 

“இதை நான் உன்னிடம் கேட்க வேண்டியது, ஆமாம் மதன் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறோம்” என்றான். 

“இது எப்பொழுது நடந்தது” என்றேன் கலக்கத்துடன். 

“அன்றொருநாள் மேனேஜர் சுந்தரியிடம் அவசரமாக ஒரு தென்டர் ஒன்று செய்வதற்காக அவர் வரும் வரை சற்று நேரம் காத்திருக்க சொன்னார். அவர் காண்ட்ராக் மீட்டிங்கில் இருப்பதாக அலைப்பேசி மூலம் தெரியப்படுத்தினார். இரவு மணி எட்டு ஆகியும் மேனேஜர் வரவில்லை. அனைவரும் கிளம்பி சென்று விட்டனர். அனைவரும் கிளம்பியதும் அவள் தனியாக இருக்க பயந்தாள். நான் முகநூல் பார்த்துவிட்டு தாமகமாகத்தான் சென்றேன்”. 

“நான் இருப்பதை அவள் கவனிக்கவில்லை. நான் கிளம்புவதற்காக எழுந்தவுடன், நின்று கொண்டிருந்த சுந்தரி என்னை கண்டவுடன் பேய் என பயந்து கத்திவிட்டாள். நான்தான் பயப்படாதிங்க என்று சமாதானம் படுத்தினேன். சற்று நேரம் வயற்றை பிடித்து கொண்டு உட்கார்ந்தாள். பயத்தினால் அவளுக்கு மாத விடாய் வந்து விட்டதை புரிந்துகொண்டேன். சற்று நேரம் அவளை பொறுக்க சொல்லிவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று மாத விடாய் பட்டையை வாங்கி கொடுத்தேன்”. உண்ண பிசா, பர்கேறும் வங்கி கொடுத்தேன். அவள் சற்று சமாதானம் ஆனதும் என்னிடம் மன்னிப்பு கேட்டாள். நானும் அவளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு நண்பர்களாகி கொண்டோம். மேனேஜர் வரும் வரை அவளுக்கு பேச்சு துணையாக இருந்தேன். வேலை முடிந்தவுடன் நானே வீட்டில் விட்டேன். எங்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். சரியான நேரம் அமையவில்லை. சுந்தரியும் பெண் கேட்டு என்னை வரச் சொன்னாள். நான் அவளிடம் எனக்கு எல்லாமே மதனும் மதனின் அம்மாவும் தான் என்றும் மதனிடம் கூறி அவன் சம்மதத்துடன் பெண் கேட்டு வரேன் என்றேன். அதற்கு சுந்தரி நானே மதனிடம் விசயத்தை சொல்லி சம்மதம் வாங்கி வரேன் என்றாள். அதற்குதான் அன்று உணவகத்திற்கு வர சொன்னாள். அவள் ஒன்று சொல்ல நீ ஒன்று நினைத்து கொண்டாய்” என்றான். 

“நானும் ஷங்கரும் விரும்பும் விஷயம் உங்களுக்கு தெரியும் என்றுதான் நினைத்தேன். உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னிச்சிருங்க” என்றாள் சுந்தரி. செய்றதையும் செஞ்சு புட்டு இப்ப பாரு திருவிழாவிலே காணாம போன பிள்ளையாட்டம், என்று மனதுக்குள் எண்ணி கொண்டேன். 

“எல்லாம் என் தலை எழுத்து, இப்படி எல்லாம் ஏமாறனும்னு”. விழியோரம் வழிந்த கண்ணீரை வெளி காட்டாமல் தரையை தொடும்முன் துடைத்துவிட்டு இயல்புக்கு வந்தேன். 

“இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்” என்றேன். 

“நீதான்டா எப்படியாவது இதை பற்றி அம்மாகிட்டே சொல்லி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்” என்றான் ஷங்கர். 

சரி என்று சொல்லிவிட்டு அவர்களின் காதலுக்கு காவலாகவும் இருந்த 
போது என் நினைவலைகள் பின்னோக்கி சென்றது. 

“ரம்யா எப்படி நான் பேசினது நன்றாக இருந்ததா” என்று நான் கேட்டு கொண்டிருக்க, அவள் வேகமாகவும் கம்பீரமான நடையில் செல்ல அவள் பின்னால் நானும் தொடர்ந்தேன். 

“எல்லாம் நல்லாத்தான் பேசினாய், யாரும் சிரிக்காத வரைக்கும் உன் தலை தப்பியது’ என்றாள் ரம்யா. 

“ரம்யா நான் எதை செய்தாலும் நீ மட்டும் திருப்தி அடையவே மாட்டாய்” என்றேன். 

“சரி சரி அதுக்கு போய் ஏன்டா இப்படி அலுத்துக்கிரே. என்னை கொஞ்சம் எடுத்து கொடுக்க சொல்லிவிட்டு அதற்கு எனக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை, அழகா அங்கிலத்தில அனல் பறக்கும் ஒரு பேச்சு தெரியுமா மதன், நானே பெசியிருந்தால்கூட இந்தளவுக்கு இருக்காது என்றாள் ரம்யா. 

ரம்யா என் உயிர் அவளை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். அந்தளவுக்கு அவள் மேல் எனக்கு காதல். பல நேரங்ககளில் அவளுடன் தனிமையில் பல மணி நேரம் பேசி கொண்டிருந்திருக்கிறோம். சிலசமயம் அம்மா அழைக்கிறாள் என்று அலைபேசி எடுத்து கொண்டு தொலைவாக நின்று பேசுவாள். இது பல முறை நிகழ்ந்திறுக்கிறது. 

ஒரு நாள் மிகவும் தலை வலியாக இருக்கிறது என்று கல்லூரியிலிருந்து விரைவாக வீடு திரும்பிவிட்டேன். ரம்யா கையால் மாத்திரையும் காப்பியும் குடித்தால் தலைவலி சரியாகிவிடும் என்று. அங்கே சென்றால் தெரியுது தலைவலி இன்னும் அதிகமா ஆயிடுச்சி என்று. 

ஆம். ரம்யாவா இப்படி, அவள் அருகில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு சிரித்து பேசி கொண்டிருந்தான். நான் சென்ற நேரம், “வா மதன்” என்று உள்ளே அழைத்தாள். என்றுமே இல்லாமல் ரம்யா இன்று அறை கால் சட்டை அதுவும் முட்டி காலுக்கும் மேல் வரை மிகவும் இறுக்கமாக உடுத்திருந்தாள். பார்க்கவே மிகவும் செக்சியாக இருந்தாள். காதலிக்கும் என் முன்னால் கூட இப்படி அணிந்ததில்லை. யாராக இருக்கும் இவன் என்ற யோசனையோடு உள்ளே நுழைந்தேன். 

ரம்யா அவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள். நானும் ஒப்புக்கு தலை அசைத்து வைத்தேன். நான் மேல் மாடிக்கு செல்லும் முன் திரும்பி மேசையை பார்த்தேன், குளிர்பானம் ஒரு கிளாஸ் மட்டும் தான் இருந்தது. அதை அவன் எடுத்து குடித்து விட்டு கீழே வைத்ததை கவனித்தேன். என் தலை மறைந்த பின்னர் திடீர் என ரம்யா அதை எடுத்து குடித்ததை கவனித்து விட்டேன். குழம்பினேன். 

மாடியில் என் அறைக்கு சென்று தாழ்ப்பால் இட்டு கொண்டேன். கண்கள் குளமாகின. அன்று ஒரு நாள் முழுதும் அறையை விட்டு வெளிவரவில்லை. மறுநாள் காலையில் நான் கல்லூரிக்கு கல்லூரி பேருந்தில் சென்றேன். அவளுக்கு இன்று மத்தியானம் கிளாஸ் என்பதால் அவள் வீட்டில் இருப்பதை அவள் அறைகதவு தாழிடப்பட்டிருந்த்தை வைத்து அறிந்து கொண்டேன். பேருந்தில் சிறிது நேரம் கழித்து மனம் இல்லாமல் அவளை அலைபேசியின் மூலம் கொண்டு பேசினேன். 
“ரம்யா என்ன பன்றே”? என்றேன். 
“இபொழுதான் எழுந்தேன் மதன். கல்லூரிக்கு கிளம்பிட்டாயா? என்னை எழுப்பவே இல்லை. எப்பவும் நான்தானே உனக்கு காப்பி போட்டு கொடுப்பேன்” என்றாள். 

சற்று நேரத்தில் மதன் என்று யாரோ இருவர் சுயநினைவுக்கு கொண்டு வந்தனர். பார்த்தல் ஷங்கரும் சுந்தரியும் தான். 

“என்னடா ஷங்கர் என்ன முடிவு எடுத்து இருக்கீங்க” என்றேன். 

“டேய் என்னடா இது விடிய விடிய ராமாயணம் கேட்டு விட்டு விடிஞ்ச பின் ராமன் சீதைக்கு அண்ணனானு கேட்ட கதையாய் இருக்கு, நீதாண்டா அம்மாகிட்ட சொல்லி கல்யாணத்தை தடுத்தி நிறுத்தி என்னையும் இவளையும் சேர்த்து வைக்கணும்” என்றான் ஷங்கர். 

நானும் அம்மாவிடம் எடுத்து சொன்னேன். அதற்கு அம்மா “நீ ஆசைப்பட்ட பெண்ணை ஷங்கருக்காக விட்டு கொடுக்கிறாயா மதன்” என்றார் அம்மா. 

“சின்ன திருத்தம் மா, ஷங்கர் விரும்பிய பொண்ணை தான் நான் ஆசை பட்டு இருக்கிறேன். அவர்கள் இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புறாங்க, இதில் நான் எதுக்கு குறுக்கே நந்தியாட்டம் நின்று அவர்களின் நிம்மதியை கெடுக்கனும் ம்மா, கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழட்டும் விடுங்க ம்மா” என்றேன். 

அம்மா கண்ணீருடன், “இந்த பொண்ணையும் விட்டு கொடுத்திட்டியா, உன்னை அந்த ஆண்டவன் தான் காப்பாற்றனும்” என்று அம்மா புலம்பி கொண்டே சென்றாள். இந்த பொண்ணையும் விட்டு கொடுத்திட்டியா, அம்மா சொன்னது, அழுத்தமாக என் காதில் ஒலிக்க, அப்படி என்றால் இதற்கு முன் உள்ள பெண், ஆம் ரம்யா. 

மீண்டும் நினைவலைகள் பின்நோக்கி, பேருந்தில் நான், “இதெல்லாம் நல்லாத்தான் பேசுற, இப்படி பேசி பேசியே என்னை மயக்கி வச்சிருக்க. நான் நேரடியாக கேட்கிறேன், நீ உண்மையில் என்னை காதலிக்கிறாயா, இல்லையா” என்றேன். 

“ஆமாம் மதன் இதில் என்ன சந்தேகம். உன்னை காதலிப்பதால் தானே உன்னை, நான் தங்கியிருக்கும் வீட்டின் மேல் மடியில் குடியிருக்க வைத்தேன்” என்றாள். 

“அப்படின்னா நேற்று வந்தது யார்”? என்றேன். 
“அவன் என்னுடைய ப்ரெண்ட், மேல் நிலை பள்ளியில் ஒன்றாக படித்தோம். என்னை பார்பதற்காக வந்தான்” என்றாள். 

“ரம்யா நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன் தெரியுமா? நீ என்னிடம் பொய் சொல்ல முடியாது, ப்ரென்ட்டிடம் எப்படி நடந்து கொள்வாய் என்று எனக்கு தெரியாதா ரம்யா, அவன் வந்தப்ப உன் உடல் அசைவையும் உன் முகத்தில் ஏற்பட்ட நாணமும் அவன் வருகையால் ஏற்ப்பட்டது என நான் அறிவேன். அவன் குடித்த எச்சில் கலந்த குளிர்பானத்தை நீ பருகினாயே, அப்பவே நான் செத்துட்டேன் ரம்யா செத்துட்டேன்” என்றேன். 

சற்று நேரத்தில் எதிர்முனையில் அழுகை. போச்சிடா இப்ப என்னத்தை சொல்லி என்னை கவிழ்க்க போறாளோ என்று மனதில் நினைத்து கொண்டேன். 

“மதன் யாருக்கும் தெரியாத ஒரு உண்மையை உன்னிடம் சொல்றேன். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது மூர்த்தி என பையனை ஒரு தலையாய் காதலித்தேன். அவனிடம் என் காதலை சொல்லியபொழுது அவன் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்னால் உன்னை காதலிக்க முடியாது என்றான். அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்ட நான் அவன் காலில் விழுந்து என்னையும் காதல் செய், வேண்டுமானால் என்னை வைத்து கொள் என்று கூட கேட்டுவிட்டேன். அவன் இறுதி வரை முடியவே முடியாது என்று சொல்லிவிட்டான். நான் மன உடைந்து போனேன். அன்புக்காக ஏங்கினேன். என்னை ரசிக்கும் ஆண்களை மயக்கினேன். ஆனால் பணத்துக்கோ அல்ல ஆடம்பர வாழ்க்கைக்கோ நான் மயக்கவில்லை. காதல் என்ற பெயரால் கிடைக்கும் அன்பே உண்மையானது சந்தோஷமும் பாதுகாப்பும் கிடைக்கும் என்றுதான்” என்றாள் ரம்யா. 

“அப்படி என்றால் என்னை மட்டும் தானே உண்மையாக காதலிக்கிர ரம்யா” என்றேன். 

“நான்தான் சொன்னேனே மதன், என் மனம் இன்னும் மூர்த்தியை தான் நினைக்குது. அவன் மட்டும் என்னை ஏற்றுக்கொண்டிருந்தால் உன்னிடம் பழகியே இருக்க மாட்டேன். அவனிடம் கிடைக்காத அன்பை உன்னிடம் எதிர்பார்த்ததை தவிர வேறோன்றும் இல்லை மதன். உன்னை காய படுத்திருந்தால் என்னை மன்னிச்சிரு மதன்” என்றாள். 

“நீ யாரை காதல் பண்ணாலும் பரவாயில்லை, என்னையும் காதல் பண்ணு ரம்யா. என்னால் உன் மூர்த்தியிடம் நீ இழந்த அன்பை என்னால் கொடுக்க முடியும் ரம்யா. ஒரு வருடத்திற்கும் மேல் உன் பின்னாலே சுற்றுகிரனே, எப்படி எல்லாம் உன்னை கவனித்து கொண்டேன்னு உனக்கு தெரியும்தானே ரம்யா” என்றேன். 

“மதன் இப்பவும் அதேதான் சொல்றேன், என்னால் காதல் பண்ண மட்டும் தான் முடியும், கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று வைத்து விட்டால் அலைபேசியை. 

என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் விரும்பும் பெண் இன்னொருத்தனையும் காதலிப்பாள், அதை நான் எப்படி ஏற்று கொள்வது என தவியாய்த் தவித்தேன். அவளை எப்படியும் என் காதல் எனும் மருந்தால் என் வழி கொண்டு வந்திடலாம் என போட்டேன் ஒரு தப்புக் கணக்கு. என் காதலை அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் பல தடவை ரம்யாவிடம் பேசி மருமகளே... மருமகளே என கொஞ்சி இருக்கிறார். 

மறுகணம் என்னை அலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, “மதன் நீ உன் அம்மாவிடம் என்னை பற்றி என்னவென்று சொல்லி இருக்கிறாய்” என அதட்டும் குரலில் கேட்டாள். 

நான் இதுதான் சமயம் என்று, “ நான் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள போகின்ற பெண் என்று சொன்னேன்” என்றேன். 

“நினைத்தேன், உன் அம்மா என்னம்மோ சாப்டியா, கொண்டியா, என் பையனை புடிச்சிருக்கா என பினாத்துராங்க. இதுலே வேறு மருமகளே ன்னு அழைக்கிறாங்க. தயவு செய்து என்னை என் வழியில விட்டுவிடு, இனிமேல் என்னை தொடர்பு கொள்ள எண்ணாதே” என்று அவித்து விட்டாள். 

அதன் பின் ஒரு வருடத்திற்கும் மேல் அவள் நினைவாலே சுற்றி திரிந்தேன். எதிலும் ஒரு பிடிமானம் இல்லாமல் கிடந்தேன். அதற்கு பின் காதலே வேண்டாமென்று வேலை வீடுன்னு இருந்தேன். ஐந்து வருடம் கழித்து பழைய நினைவுகளை தட்டி எழுப்பினாள் சுந்தரி, இவளும் ஷங்கரின் பிடியில். 

ஒரு வழியாக சுந்தரியின் வீட்டிலும் பேசி பெரிய கலவரத்துக்கு பின் “ஷங்கர் ஒன்னும் ஆனாதை அல்ல, அவனுக்கு அண்ணனாக நானும் அம்மாவாக என் அம்மாவும் இருக்கிறோம், ஒன்றும் கவலை வேண்டாம்” என்று உறுதியாக கூறினேன். 

அப்படி ஒரு வார்த்தை என் வாயால் கேட்ட பின்னரே சுந்தரியின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். 
கலையான நாளும் வந்தது. சிறப்பாக கல்யாணமும் முடிந்தது. சில மணி நேரம் கழித்து இடி விழும் தகவல் என் தலையில் விழுந்தது. ஆம், முகநூலை பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன். விரைவாக பொண்ணையும் மாப்பிள்ளையும் அனுப்பி விட்டு ஓடினேன் மருத்துவமனைக்கு. அங்கே அவசர சிகிச்சை பிரிவில் பாதி உயிர் போன நிலையில் ரம்யா. சுயநினைவு எதுவும் இன்றி கடந்தாள். கழுத்தில் தாலி, குழம்பினேன் ரம்யா கல்யாணம் செய்துவிட்டளா என்று. 

அங்கே வந்த தாதியரிடம் கேட்டேன், அவள் “கணவனும் வயற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டனர், என்றாள். வெளியில் ஒரு பெரிய ரகளையே நடந்து கொண்டிருந்தது. ஆம், ரம்யா கணவனின் வீட்டார்களுக்கும் ரம்யா வீட்டர்களுக்கும் கலவரம்தான். என்ன பேசி கொண்டிருகிறார்கள் என்று சற்று காத்து கொடுத்து கேட்கவே, தெரிந்தது இரு வீட்ட்ரக்ளுமே ரம்யாவுக்கு இப்படி ஆனதுமே யார் இவளுக்கு உட்கார வைத்து சோர் போடுவது என ஒதுக்கி வைக்கும் எண்ணம் அவர்களின் பேச்சில் தோன்றியது. ரம்யாவின் அம்மாவோ மருத்துவ செலவை எண்ணி அவளை சம்பந்தி வீட்டுக்கு தள்ளி விட பார்க்கிறார். இதெல்லாம் கேட்ட எனக்கு, என ரம்யாவுக்கா இந்த நிலைமை. அவள் குணமாகவே பல மாதங்கள் ஆகும். கால், முகம், நெஞ்சு பகுதியில் பலத்த காயம். அவளை இவர்களிடம் இருந்து காப்பாற்றியே ஆக வெண்டும் என்று எழுப்பினேன் நிறுத்துங்கள் என்று ஆக்ரோஷமாக. இங்கிருந்து எல்லாரும் கிளம்புங்க, ரம்யாவை நான் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் ஒரு வார்த்தை அவளை பற்றி பேசக்கூடாது என்று நகர்ந்தேன் ரம்யாவை பார்க்க. அவளை நானே அருகில் இருந்து கவனித்து கொண்டேன். 

சில நாட்களில் அவளை என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். என் கண்ணுக்குள் வைத்து அவளை பார்த்து கொண்டேன். என் அம்மாவும் முதலில் ஏற்க மருத்தார், பிறகு அவரும் என் ரம்யாவை பார்த்து கொள்ள ஆரம்பித்தார். நானும் அவள் வாழ்வில் என்ன நடந்தது என்று பழசை கிளற விரும்பவில்லை. அவள் நடக்க ஆரம்பித்ததும், முன் அவள் நடையில் இருந்த கம்பீரமும் தெனாவட்டும் இப்பொழுது இல்லை. 

சுந்தரி, ரம்யாவை பார்க்க அன்று வந்தாள். அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அரையோரம் கடந்தபோது என் காதில் விழுந்தது இப்படி. 

“சுந்தரி, நான் மதனை அதிகம் நோகடித்து விட்டேன். இப்பவும் கூட எனக்கு மறுவாழ்வு கொடுத்து இருக்கிறான். நான் சுயநலமாகவே இருந்து விட்டேன். அதனால் கிடைத்த தண்டனைதான் இது. கணவனை இழந்து வயிற்றில் உள்ள பிள்ளையும் இழந்து ஆனாதையாக கிடக்கிறேன்” என்றாள் ரம்யா. 

“நீ கல்யாணம் பண்ண மாட்டேன் என்று சொன்னதாய் மதநூடே அம்மா சொல்லியிருந்தாங்க, அப்புறம் எப்படி கல்யாணம் ஆச்சு ரம்யா” என்றாள் சுந்தரி. 

“மனம் ஒரு குரங்கு, சுந்தரி, காதல்னு பெயரால் ஆண்களை மயக்கி அவர்களின் அன்பில் சந்தோசம் அடைந்த நான், ஒரு கட்டத்தில் என்னையே நான் தொலைத்து விட்டேன், அதலால் வயிற்றில் உண்டானது உயிர். அவன் என்னை கல்யாணம் பண்ணவே உன்னை அடைந்தேன் என்று கல்யாணம் பண்ணிக்கிட்டான் அவன் பெற்றோர்களை எதிர்த்து. பல போராட்டத்துக்கு மத்தியில் எங்கள் வாழ்க்கை ஓடியது. குழந்தை பிறக்கும் தருவாயில் அனைத்தையும் இழந்துவிட்டேன் இப்பொழுது” என்றாள் ரம்யா. 

அதற்கு சுந்தரி, ரம்யா கவலை படாதே, மதன் மிகவும் நல்லவன் என்று சொல்லி என்னை புல்லரிக்க வைத்தாள். 

அதன் பிறகு ஒரு நாள் ரம்யா தனிமையில் இருக்கும் பொழுது, அவளிடம் நேருக்கு நேர் கேட்டேன், “என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பாயா” என்றேன். 

“ரம்யா அழுது கொண்டே அதற்கு சம்மதம் இல்லை என்று சொல்ல தகுதியற்றவள் என்றாள். 

“நான் உன்னைத்தான் நேசித்தேன் தவிர உன் உடலை அல்ல, அதனால உனக்கு என்ன நேர்ந்திருந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று அவளை என் நெஞ்சோடு அனைத்துக்கொண்டேன். ஷங்கர், சுந்தரி மற்றும் என் அம்மா கண்டு மகிழ்ந்தனர். காதல்னா சும்மா இல்லை, காதல் காதல்தான். எத்தனை நாள் ஆனாலும் சேர்த்து வைத்து விடும்.

No comments:

Post a Comment

Popular Posts