காதலில் தோல்வியடைத்தவர்களுக்கா சமர்ப்பிக்கிறேன்

காதலில் தோல்வியடைத்தவர்களுக்கா சமர்ப்பிக்கிறேன்

காதலில் தோல்வியடைத்தவர்களுக்கா சமர்ப்பிக்கிறேன்
ஒரு பெண்ணும் ஆணும் சில வருடங்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் நேசிக்கின்றனர் 

திடீரெண்டு ஒரு நாள் காரணமின்றி அவள் அவனை விட்டு பிரிகிறாள் அவனும் பிரிவின் காரணத்தை அவளிடம் கேட்கிறான் பதில் ஒன்றுமே இல்லை முழுவதுமாக அவன் ஒதுக்கப் படுகிறான் 

அவன் இந்த துயரமான மிகவும் கொடுமையான வலியை தாங்க முடுயாமல் கண்ணீர் மழையில் நனைய அவன் இல்லத்தில் இருப்பபவர்கள் அவனுக்கு ஆறுதல் வழங்க அவர்களின் கண்களும் அங்கே கரைகிறது 

சிலமாதங்கள் அவன் இதை எண்ணி எண்ணி துடித்துக்கொண்டு ஒரு நாள் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ள முயல்கிறான் 

அவன் குடும்பத்தார் அவனை தடுத்து காப்பாற்றி குடும்பத்தின் நிலைமையை எடுத்துரைக்கின்றனர் 

அவன் சிந்தித்து அந்த வலிகளை தனக்குள் மறைத்துக் கொண்டு அந்த பெண்ணையும் தொந்தரவு செய்யாமல் அவளாவது நினைத்த வாழ்க்கையை நல்ல முறையாக வாழட்டும் என்று தன் குடும்பத்தார் நலன் கருதி பணிக்கு செல்ல ஆரம்பமானான் 


நாட்கள் இப்படியே நடந்தன ஒரு நாள் அவள் ஒரு பேருந்து நிலையத்தில் தனியாக நிற்கிறாள் 

அவள் முகம் சோக மழையில் நனைந்துள்ளது இதைக்க கண்டவன் மனம் தாங்க வில்லை 

என்னதான் அவள் தன்னை வெறுத்திருந்தாலும் அவளுக்கு இப்போது ஏதோ பிரச்னை ஆயிரம்தான் இருந்தாலும் தான் நேசித்த இதயம் கவலைப் பெறக்கூடாது முடிந்தவரை உதவலாம் என்று அவளருகில் செல்ல நினைக்க 


அவள் அக்காவின் கணவர் வந்து அவளை அழைத்து சென்று விடுகிறார் 

இவன் பல குழப்பங்களுடன் அதையே எண்ணிக் கொண்டு அவளிடம் பேச பல வழிகளில் முயற்சித்து தோல்வியடைகிறான் இன்றுவரை அவள் மீது கொண்ட உண்மையான அன்பால் 

அணைத்து நம்பர்களுக்கும் ravisrm in அன்பு வணக்கங்கள் 
நான் இத்தகைய ஒரு காதல் தோல்வி படிப்பை உருவாக்க காரணம் 


காதல் தோல்வியால் பெண் மீது காதலன் ஆசிட் விச்சு கழுத்தறுத்து பெண் கொலை பெண் ஏமாற்றியதால் கற்பழிப்பு 

இது போன்ற சம்பவங்கள் இப்போது சற்றே அதிகரித்துள்ளது 

உண்மையாக காதலித்திருந்தால் ஒருவனாலும் இப்படி செய்ய இயலாது 

ஏனென்றால் உண்மையாக நேசிப்பவன் அவளை மட்டும் அல்ல அவள் உறவுகளையும் தன் குடும்பமாக பார்ப்பான் அவளுக்கு என்ன பிரச்சனையோ என்று புரித்துக் கொண்டு ஒதுங்கி வாழ்வான் அவளை உள்ளத்தில் சுமந்துக் கொண்டு 

உண்மையா காதலிச்சிருந்த 
நினைவோடு வாழ்த்தும் பார் அந்த சோகத்தின் சுகமே தனி 

பிடிச்சிருந்தா ஷேர் செய்யுங்கள் 
கொடுமைகள் குறையட்டும் நன்றி 

No comments:

Post a Comment

Popular Posts