காதல் பழக வா
காதல் பழக வா
உன் மீதான காதலை
சுமந்து கொண்டு
உன்னை தேடி வருகிறேன்...
என் மீதான காதலை
எனக்காக வளர்த்துக்கொள் காதலியே...
உன் கரம் பற்றி
அழைத்துச்செல்லவே நாட்களை
எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்
இப்படிக்கு உன் காதலன்...
"அக்கா.....அக்கா..."
"என்னடி, சும்மா அக்கா அக்கானு பின்னாடியே சுத்திட்டு இருக்க, ஒரு இடத்துல போய் உட்கார வேண்டியது தானே, இப்டியே ஓடிக்கிட்டே இருந்தா கால் வலிக்காதா"
"அப்டிலாம் உன்ன விட்டுட்டு உட்கார முடியாது,அப்போ நீயும் கூட இரு, நான் ஒரு இடத்துல உட்கார்ந்துக்கறேன்"
"ஏய் வாலு, இன்னைக்கு நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வராங்க, அதான் நானும் என்னால முடிஞ்ச வேலைய செஞ்சிட்டு இருக்கேன், கல்யாணம் பண்ண பின்னாடி நாமளும் எல்லா வேலையையும் செஞ்சி கத்துக்கணும், அதைவிட்டுட்டு சின்ன பிள்ளையோட உட்கார்ந்த நல்லவா இருக்கும்"
"அப்போ நான் சின்ன பிள்ளையா"
"பின்ன இல்லையா, நீ சின்ன பிள்ளை தான்"
"போக்கா, உனக்கு எப்பவுமே நான் சின்ன பிள்ளையா தான் தெரிவேன், எனக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு"
"இங்க முகத்தை காட்டு, என் தங்கச்சிக்கு கல்யாண வயசு வந்துடுச்சாமே, நானும் அத கொஞ்சம் பார்க்கறேன்...."
"போக்கா, இப்டிலாம் பார்க்காத, எனக்கு வெட்க வெட்கமா வருது"
"என் மதுவுக்கு வெட்கம்லாம் வருதாமே, இத யார்கிட்ட சொல்வேன், ஊரை கூட்டி தண்டோரா போட்ற வெட்டியது தான், என் மது வெட்கபட்டுடான்னு"
"என்னை கிண்டல் பண்ணது போதும்க்கா, நம்ம வீட்டுக்கு யார் வர்றா, அத சொல்லவே இல்லையே"
"அதான் சொல்லிட்டல்ல, உனக்கு கல்யாண வயசு வந்துடுச்சுனு, உன்ன பொண்ணு பார்க்க மாப்ள வீட்ல இருந்து வர்ராங்க, மாப்பளைய பிடிச்சிருக்குனு சொல்லிடு, சீக்கிரம் கல்யாண தேதியை குறிச்சிடலாம், "
"அக்கா, உன் கிண்டல நிறுத்தவே மாட்டியா, நீ சொல்லாத போ, நான் மாமாகிட்ட கேட்டுக்கறேன், இனி உன் பின்னாடி சுத்தவே மாட்டேன், என்ன கிண்டல் பண்ணிட்டே இருக்கல்ல, போ"
"இனி நீ எங்க என் பின்னாடி சுத்த போற, உன்னோட ராஜகுமாரன் பின்னாடி தானே சுத்துவ"
"இனி இங்க நின்னா அவ்ளோ தான், நான் மாமாகிட்ட கேட்டுக்கறேன், நீ உன் வேலைய பாரு" என்று கூறிக்கொண்டே ஓடியவளை சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள் ராதி...
ராஜகுமாரன் என்றதும் ராமின் நினைவு வந்தவளுக்கு அவனை பற்றி யோசித்ததும் வெட்கமும் வந்துவிட்டது, என்னவோ அவன் நினைவும் குரலும் அவள் மனதை குறுகுறுத்து கொண்டே இருந்தது...
"எதுக்கு இப்படி க்ளாஸ் எடுக்கற, என்னவோ நான் கண்ணன் வீட்டுக்கே போகாதவ மாதிரி இல்ல நடத்துக்கற, அங்க என்ன பேசணும், எப்படி பேசணும்னு எனக்கு தெரியாதா, நீ பேசறது பண்றதெல்லாம் எனக்கு வித்தியாசமா இருக்கே"
"அம்மா அதில்ல, நீங்க பாட்டுக்கு அங்க போய்ட்டு கல்யாண பேச்செடுத்திங்கனா அது சங்கடமா போய்டும், இப்டி பொண்ணு பாரு, இந்த மாதிரி பொண்ணு இருக்கணும்னு நீங்க பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருப்பிங்க, அங்க இருக்கற நிலைல என்னோட கல்யாண பேச்சி வேற மாதிரி விளைவு ஏற்படுத்தும், அதான் சொல்றேன், புரிஞ்சிகோங்கமா"
"சரிடா, உன் கல்யாணத்த பத்தியே பேசல, போதுமா"
"அப்படி ஒரேடியா விட்றாதீங்க, நான் சொல்லும்போது பேச ஆரம்பிச்சா போதும்"
"இதுவேறயா, சரி இப்போ கிளம்பலாமா, இல்ல வேற எதாவது சொல்லனுமா"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை, இப்போ கிளம்பறது மட்டும் தான் பாக்கி"
ராம் ஏதேதோ கனவுகளோடு கண்ணன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான், மதுவும் தன் எதிர்கால கனவுகளோடு அந்த வீட்டில் உலவிக்கொண்டிருந்தாள்...இருவரும் சந்தித்துக்கொள்ளும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது...
"ராதி விருந்துலாம் ரெடி ஆச்சா, ராம் வர நேரம் ஆச்சி"
"எல்லாமே ரெடியா இருக்குங்க, நீங்க போய் ஹால்ல வெயிட் பண்ணுங்க, நான் இங்க பாத்துக்கறேன்"
"அண்ணா, ராம் அண்ணா வந்துட்டாங்க"
"இதோ வேறேன்மா, ராதி நீயும் கூட வா, ராம் அம்மாவை நீ இன்னும் பார்த்ததில்லையே"
ராமையும், அவன் அம்மாவையும் ஒட்டு மொத்த குடும்பமும் பாசத்தோடு கவனிக்க ராம் திக்குமுக்காடி போனான்...
"என்னடா இது, என்னவோ புதுசா வந்த விருந்தாளி மாதிரி கவனிக்கற, நான் தினமும் தான் உன்ன பார்க்கறேன், இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல"
"இது உனக்காக இல்ல, அம்மாக்காக..அம்மா எப்பவும் எனக்கு ஸ்பெஷல் தான், உனக்குன்னு தப்பா நினைச்சிக்காத"
"அப்டியா, அப்போ எனக்குலாம் ஸ்பெஷல் எதுவும் இல்லையா, சரி தான், நண்பனை பார்க்கணும்னு உன்ன தேடி வந்தேன் பாரு... என்ன சொல்லணும், ராம் உனக்கு இதெல்லாம் தேவை தானா"
"அண்ணா, கண்ணன் அண்ணன் சும்மா பொய் சொல்லுது, உனக்காகவும் தான் எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சது, இப்போ உங்கிட்ட ஆக்ட் குடுக்குது"
"ஏய் வாலு, நீ யாரு சைட்"
"நான் எப்பவும் உண்மையோடு சைட் தான்" என்று முகபாவத்தோடு சொன்னவளை பார்த்து அத்தனை பேரும் சிரித்துக்கொண்டிருக்க ராம் தன் காதல் தேவதையை தேடிக்கொண்டிருந்தான்...
"அண்ணா, மதுவை காணோமே, நான் போய் கூட்டிட்டு வரேன்"
"ஆமா, அவ தான் கெஸ்ட் யாருனு கேட்டுட்டே இருந்தா, முதல்ல கூட்டிட்டு வா, இல்லனா அப்புறம் யாரையும் உட்கார விடமாட்டா, ஏன் என்னை கூப்பிடலைனு கச்சேரி வச்சிருவா"
ராமிற்கு இப்போது தான் அண்டார்டிக்காவின் பனிக்கட்டி மனதிற்குள் சில்லிட துவங்கியது, அவளை பார்க்கும் ஆவல் மேலும் அதிகமானது....
"அம்மா , என் மனைவியை நீங்க இன்னும் பார்த்ததில்லையே...இவங்க தான் ராதி, இவங்க தான் உங்களுக்க ஸ்பெஷலா சமைச்சிருக்காங்க, சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க, என் செலெக்க்ஷன் பெஸ்ட்டா இல்லையானு"
"கண்ணன் செலக்ஷனை சொல்லவா வேணும், எப்பவும் நீ சரியா தானே முடிவெடுப்ப, அந்த நம்பிக்கைல தான் சூழ்நிலை சரியாகட்டும்னு வராம இருந்துட்டேன், ராம் கூட நான் சொல்ற வரைக்கும் இதப்பத்தி எதுவும் பேசிக்க வேணாம்னு சொல்லிட்டான், ஆனாலும் நினச்சா மாதிரியே உன் செலக்ஷன் சூப்பர் தான்பா, நான் வந்ததும் என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கினப்பயே புரிஞ்சிடுச்சு"
"அம்மா, இவ்ளோ சீக்கிரம் முடிவெடுக்காதிங்க, அப்புறம் என்ன மாதிரி பீல் பண்ண வேண்டியது வரும்" என்று கண்ணன் கிண்டல் செய்யவும் ராதி கண்ணனிடம் 'உள்ள வாங்க பேசிக்கிறேன்' என செய்கை செய்ததை பார்த்து மீண்டும் அத்தனை பேரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்...
"அண்ணா, கண்ணனோட கல்யாணம் முடிஞ்சதும், என் பையனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடனும், நீங்கலாம் தான் இவன் கிட்ட பேசி சம்மதம் வாங்கி தரணும்"
"அதுல என்னமா கஷ்டம், ராம் நல்ல பையன் ஆச்சே, சொன்னா கேட்டுக்க போறான்"
"பெரியப்பா அப்டிலாம் நினைக்காதீங்க, ராம் எங்கயோ சிக்கிட்டான், இனி நாமெல்லாம் சொன்னா அவன் கேட்பானான்றது சந்தேகம் தான்"
கண்ணனின் பேச்சில் ராம் சற்று திடுக்கிட, கண்ணன் லேசாய் கண்ணடித்து சிரித்தான்...
"கண்ணா நீ வேற, எதாவது சொல்லி அம்மாவை உசுப்பேத்திவிட்றாத, அப்புறம் என் பாடு திண்டாட்டம் தான்"என்று ராம் கெஞ்சவும் "கண்ணன் போனால் போகட்டும், பாவம் பார்த்து விடறேன்" என்று சிரித்தபடி ராமை மேலும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டான்...
தன்னை சுற்றி என்ன நடந்தாலும் மதுவை பார்க்கும் ஆர்வம் ராமிற்கு குறையவில்லை...
மதுவோ கெஸ்டை பார்க்க வந்த நேரத்தில் கண்ணன் ராமின் பேரை சொல்லிக்கொண்டு கிண்டல் செய்யவும் மதுவுக்கோ ஒரு நிமிடம் உள்ளுக்குள் ஷாக் அடித்தது...
ராம் வந்திருக்கிறான் என்று யூகித்தவள் அவனை பார்க்கும் சந்தோஷத்தோடு அவன் எதிரில் போய் நிற்கவும் ராமும் கண்ணனின் கிண்டலை கேட்டபடி நிமிர்ந்து மதுவை பார்க்கவும் சரியாக இருந்தது...
பார்த்த இருக்கண்களும் ஒரு நிமிடம் அதிர்ந்து திகைத்தது...

No comments:
Post a Comment