காதல் கவிதை -8

காதல் கவிதை


Kavithai Tamil for all

1. Kavithai Tamil

உன் பார்வையில் பட்ட
என் பாதங்கள் கூட
பாதையில் நடக்க மறுக்கின்றது
நீ என் அருகில் இல்லாததால்...
 
2. Kavithai Tamil

சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத
கூண்டுக்க் கிளி போல
உன் நினைவுகள் இருந்தும்
அருகில் இருக்க முடியாத
ஒரு உயிரானேன் நான்....
பல உறவுகளுக்கு மத்தியில் 
உள்ளம் தேடும் ஒரே ஒரு உயிர்
நீ மட்டுமே....
காத்திருப்பு கூட ஒரு அழகான
கவிதை என்பதை
உனக்காக காத்திருக்கும் போதுதான்
உணர்கிறேன்.....
உன்னை உயிராக நேசிக்கிறேன்...
உன் வரவை வானவில் போல
வரைந்து வைத்திருக்கிறேன் ...
 
3. Kavithai Tamil

என்னுடைய எந்தப் பெயரும்
இதுவரை இனித்ததில்லை ....
நீ சொல்லும் "செல்லம்" போல..
 
4. Kavithai Tamil

விழிகளில் சுமந்து கொண்டிருக்கும்
வலிகள் கூட
மொழிகளில் அடக்கிவிட முடியாத
கண்ணீர் துளிகளின் விம்பங்களே ...  
5. Kavithai Tamil

உன்னை நேசித்து நான் கவிதை
எழுதுகிறேன்....
ஆனால்,
என் கவிதை கூட என்னை
நேசிக்காமல், உன்னை நேசிக்கிறது
என்னை போலவே  
6. Kavithai Tamil

உன் வார்த்தைகளில் என் வாழ்க்கையின்
அர்த்தங்களை உணர்கிறேன்....
அந்த அர்த்தங்கள் என் அமைதியான உள்ளத்தில்
அழகான ஆசைகளை அப்படியே ஆழமாக
வரைந்து விடுகின்றது ......
வரையப்பட்ட அந்த வார்த்தைகள்
வானவில்லின் வண்ணங்களை விடவும்
வர்ணிக்க முடியாத வரிகள்....
உன் காதலில் என் கண்களின்
மொழியை உணர்கிறேன்.....
அந்த காதல் தான் என் காற்றோடு
கலந்து விட்ட காவியமாகி விட்டது
கடைசி வரை காவல் இருப்பேன்
உன் காதலுக்காக மட்டும்...
உன் நினைவுகள் இல்லாமல்
என் நிழல் கூட உயிர் வாழாது....
நிஜமான என் வாழ்க்கைக்கு
என்றுமே நீ வேண்டும்
நிரந்தரமாக மட்டுமல்ல
என் நினைவுகள் உன்னை விட்டு
நீங்கி விடும் வரை.........
நீ இல்லை என் நிம்மதியும் இல்லை.
 
7. Kavithai Tamil

உன் அன்பில் உயிர் வாழ்கிறேன்.....
உன் வார்த்தையில் வண்ணமாகிறேன்...
உன் பார்வையில் என் பாதையை காண்கிறேன்
உன் கோபத்தையும் குறைவில்லாமல் ரசிக்கிறேன்
இன்று உன் பிரிவில் என் வலியை உணர்கிறேன்....
என்று உன் வருகை என என் விழிகளை
வழிகளில் வைத்து காத்திருக்கிறேன்...
காதலுடனும் கற்பனைகளுடனும்....  
8. Kavithai Tamil

மழை துளிகளிடம்
மன்றாடிக் கேட்கிறேன்
என் கண்ணீரையும்
உங்களுடன் கலந்து விடுங்கள்...
அப்பொழுதாவது அது கடலுடன் சேரட்டும்...
 
9. Kavithai Tamil

கண்ணாடியில் கவிதையாக எழுதப்பட்ட
என் கதைகள் இன்று
கனவுகளில் மட்டும்
கற்பனையாகவும் கண்ணீராகவும்
காலங்களை மறந்து
காற்றாக மாறி விட்டது......
 
10. Kavithai Tamil        

சப்பான உண்மைகளுக்கு
கண்கள் சொல்லும் பதில்தான்
கனமான இந்த கண்ணீர்த்துளிகள் .........
ஊமைகளின் வார்த்தைக்கும்
உண்மையான பாசத்திற்கும்
உலகம் சொல்லும் மொழி தான் மௌனம்!
மௌனங்கள் எப்பொழுதும்
எண்ணங்களின் வண்ணங்களே...
 

No comments:

Post a Comment

Popular Posts