1. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதே
பொருள்/Tamil Meaning:
மனதிற்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப் பேசுவது.
2. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்
பொருள்/Tamil Meaning:
நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறபோது, எரிபொருளைப் பிடுங்கி விட்டால், கொதிப்பது அடங்கும்.
ஒருவர் கோபமாக இருக்கும்போது, கோபத்திற்கான காரணத்தை அறிந்து அதை நீக்கிவிடுதல்
3. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
பொருள்/Tamil Meaning:
கருப்பாய் இருக்கும் தன் குஞ்சு கூட, காக்கைக்குப் பொன்னானதாகும்.
பிள்ளைகள் எப்படி இருந்தாலும் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்தவர்களே.
4. காலம் பொன் போன்றது
பொருள்/Tamil Meaning:
நேரம் தங்கத்தைப் போன்று விலை மதிப்பற்றது. அதனால் நேரத்தை வீணாக்காமல் உபயோகிக்க வேண்டும்.
5. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
பொருள்/Tamil Meaning:
குற்றம் செய்தவர்கள், குற்றவுணர்ச்சியினால் துன்புறுவர்.
கொலை செய்தவன் தண்டனை அனுபவித்தாலும், அவன் மனச்சாட்சி உறுத்தியதால் மனநோயாளி ஆனான். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது முற்றிலும் உண்மையே.
6. சுத்தம் சுகம் தரும்
பொருள்/Tamil Meaning:
தூய்மையின் அவசியத்தை குறிப்பிடும்போது சுத்தம் சுகம் தரும் என்பதால், நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
7. தன் வினை தன்னைச் சுடும்
பொருள்/Tamil Meaning:
ஒருவர் செய்த தவறு அவரை அழித்து விடும்
தான் திருடுவது யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த வேலனுக்கு, அவனுடைய மகனும் திருடிப் பிழைக்கிறான் என்று தெரிய வந்தபோதுதான் தன் வினை தன்னைச் சுடும் என்பதை உணர்ந்தான்.
8. பசி உள்ளவன் ருசி அறியான்
பொருள்/Tamil Meaning:
பசியில் உண்ணும்போது ருசியைப் பொருட்படுத்துவதில்லை.
9. பல்லுப் போனால் சொல்லுப் போச்சு
பொருள்/Tamil Meaning:
பல் இல்லாமல் போனால் தெளிவாகப் பேச இயலாது. பற்களை இழந்த பிறகு பேசுவது யாருக்குமே சரியாகப் புரியவில்லை.
10. பாடில்லாமல் பயனில்லை
பொருள்/Tamil Meaning:
கடின உழைப்பில்லாமல் பயன்பெற முடியாது
No comments:
Post a Comment