காதல் கவிதை-6

காதல் கவிதை


Tamil Love Kavithai


1. Tamil Love Kavithai 

என் காதலை உன்னிடம் சொல்ல
எனக்கு தைரியம் இல்லை....
இருந்தாலும் சொல்லிவிட
வேண்டும் என்றெண்ணி...
தினமும்
உன் பார்வை படாத தூரத்தில்
நின்று விட்டு
மௌனமாகவே திரும்புகிறேன்..
 
2. Tamil Love Kavithai 

விரும்பும் நெஞ்சம் அருகில் இருந்தால் என்ன ,
தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள் உள்ளவரை
தொலைவும் வெகு அருகில் தான்....
 
3. Tamil Love Kavithai 

நீ தந்த நினைவுகளுக்கும்
நீ வந்த பாதைகளுக்கும்
நீ சொன்ன வார்த்தைகளுக்கும்
நீ இருந்த நிமிடங்களுக்கும்
நீ தந்த காயங்களுக்கும்
இன்று என் கண்கள் பதில் சொல்கின்றது .....
கண்ணீரில் ..
 
4. Tamil Love Kavithai 

என்னை வெறுக்கவும்,
என்னை விட்டு தள்ளி செல்லவும்
உனக்கு எப்போதும் உரிமை உண்டு..
நீ என்னை விட்டு பிரிவதால்
என் மனம் வேதனை படும்
என்று நீ வருத்தப்படாதே.. 
ஏன் என்றால்...
நீ என்னை மறுதலித்த போதே
நான் இறந்துவிட்டேன்....  
5. Tamil Love Kavithai 

உனக்காகவே காத்திருக்கின்றேன்
வர மறுக்கின்றாய்
நீ வரும் போது
ஒரு வேளை நான்
உனக்காக காத்திருக்க முடியாமல் போகலாம்
அன்று எனக்காக நீ ஒரு நொடியேனும் காத்திருக்காதே ஏனெனில் இறந்தவர்கள் மீண்டும் வருவதில்லை
 
6. Tamil Love Kavithai 

என் வானவில் போன்ற வாழ்க்கைக்கு
நீ தந்த வரங்கள் வலி
என் கயல் போன்ற கண்களுக்கு
நீ தந்த கவிதைகள் கண்ணீர்........
என் உரிமையான உள்ளத்திற்கு
நீ தந்த உண்மைகள் உன் மௌனம்......
என் முடிவில்லா ஆசைக்கு
நீ வைத்த முற்றுப்புள்ளி பிரிவு  
7. Tamil Love Kavithai 

அழகுக்கும் அறிவுக்கு அந்தஸ்துக்கும்
அடிபணியும் காதல்.....
காலப் போக்கில் கரைந்து விடும்......
இது காவியங்கள் சொல்லும் கதை அல்ல.....
கண்கள் சொல்லும் நிஜம்.
 
8. Tamil Love Kavithai 

இறந்த காலங்களில் இருவரும் இணைந்திருந்தோம்
நிகழ் காலத்தில் நீ இல்லை
என் நிம்மதியை இழந்தேன்
இன்று என் எதிர் காலம்
என்னவனின் வருகைக்காக மட்டும்
எதிர் பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றது ..
 
9. Tamil Love Kavithai 

விரும்பாமல் கேட்கிறேன்
விடுதலையை ..
உன் நினைவுகளில் இருந்து
என்னை
விடுவித்து விடு .!
 
10. Tamil Love Kavithai        

உலகமே இருட்டில்
இருந்தாலும் உன்
நினைவே எனக்கு வெளிச்சம் ..
நீ மறந்தாலும்
என் நினைவுகள்
உன்னை "தொடரும் "
நீ வெறுக்கும் வரை
அல்ல ..
உலகம் இருக்கும் வரை
 

No comments:

Post a Comment

Popular Posts