பழமொழிகள் விளக்கம் - 20


1. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

பொருள்/Tamil Meaning:

சாமர்த்தியமாகப் பேசும் பிள்ளைகள் எதையும் சமாளித்து வாழ்வார்கள்.

2. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது

பொருள்/Tamil Meaning:

அணையைக் கடந்து வெள்ளம் சென்று விட்டால், மறுபடியும் அந்த வெள்ளம் அதே அணைக்கு திரும்ப முடியாது.
தவறவிடும் வாய்ப்புகள் திரும்ப கிடைக்காது.

3. கண்டதே காட்சி; கொண்டதே கோலம்

பொருள்/Tamil Meaning:

கண்ணால் கண்டதை ஆராயாமல் அப்படியே பின்பற்றுவது

4. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

பொருள்/Tamil Meaning:
வல்லவன் – சிறந்தவன்; வையகம் – உலகம்
ஒருவன் தான்தான் சிறந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அவனை விடச் சிறந்தவன் உலகத்தில் இருப்பான்.

5. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்

பொருள்/Tamil Meaning:

ஆக்கப் பொறுத்தவன்- சமைக்கும் வரை பொறுமையாக இருந்தவன். ஆறப் பொறுக்க வேண்டும் – உணவு ஆறும் வரை பொறுத்திருக்க வேண்டும்.
பாதி வேலை முடியும் வரை பொறுத்தவன் மீதியும் பொறுக்கவேண்டும்.

6. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்

பொருள்/Tamil Meaning:

பெரிய யானைக்கு என்று ஒரு வாழ்வு இருந்தால், சிறிய பூனைக்கும் ஒரு வாழ்வு இருக்கும்.
வலியவர்கள் வாழ காலம் இருந்தால், எளியவர்கள் வாழவும் காலம் வரும்.

7. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

பொருள்/Tamil Meaning:

ஆற்றின் ஒரு கரையில் மேயும் மாட்டுக்கு அங்குள்ள புல்லைவிட மறுகரையில் உள்ள புல் கண்ணுக்குப் பசுமையாகத் தெரியும்.
ஒருவன் தன்னிடம் உள்ளவற்றை விட அடுத்தவரிடம் உள்ளதையே பெரிதாக எண்ணுவான்.

8. உதட்டிலே உறவு உள்ளத்திலே பகை

பொருள்/Tamil Meaning:

மனதில் பகையை வைத்துக் கொண்டு உதட்டளவில் நன்றாகப் பேசுவது.

9. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்

பொருள்/Tamil Meaning:

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் ஊற்றினாலும் மொத்தமும் விஷம் தான்.
அளவு சிறியதாக இருந்தாலும் வீரியம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

10. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

பொருள்/Tamil Meaning:

கைக்கு கிடைத்த உணவுப்பொருள் சாப்பிடுவதற்குள் பறிபோனது.
கைக்கு கிடைத்தப் பொருள் முழுமையாக கிடைப்பதற்குள் பறிபோகும் போது.

No comments:

Post a Comment

Popular Posts