kathal kavithai for your loved one
1. Kathal kavithai
மறக்காமல் நினைக்கிறேன் -
உன்னை ........
நினைக்கவே மறக்கிறேன் -
என்னை....
2. Kathal kavithai
அணைத்துக்கொண்டு
அருகில் இருப்பது மட்டுமல்ல காதல்....
நினைத்துக்கொண்டு
தொலைவில் இருந்தால் கூட காதல் தான்....
என் காதலும் அது போலத்தான்...
3. Kathal kavithai
4. Kathal kavithai
வழியேதும் இருந்தால் சொல்லுங்கள்
என் வலிகளைச்சொல்ல...!
"கண்" அழகுக் கண்மணியவள்
கண் கலங்கும் வேளையெல்லாம்
நொருங்கி நொருங்கி
நெகிழ்ந்தும் வெந்தும்
வேதனைத்தீயில் வெந்தபடி
வெறுமையாய் நானும்
என் இதயமும்.....
5. Kathal kavithai
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்...
ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும்
உறவாக...! மட்டும் அல்ல
உயிராக...!
6. Kathal kavithai
என்னை பிடிக்கவில்லை என்று
சொல்லி விட்டு ...
யாரை தேடி வந்தாய்
என் கனவில்
7. Kathal kavithai
ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான் அனுப்ப
வேண்டும்…
8. Kathal kavithai
காதல் கொண்ட
மனதுக்கு
நீ திட்டினாலும்
காதில் நுழையாது.
9.Kathal kavithai
உள்ளுக்குள் அழுகிறேன்
உன் காதல் தந்த வேதனையால்
வெளியில் சிரிக்கிறேன்
என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்காக..
உன்னுடன் பழகியது சில காலம்..
உன் நினைவுகளுடன் தொடர்கிறது காலம்
இவை அனைத்தையும் மறக்க
நினைக்கிறேன் ஒரு கணம்
மறு கணம் வேண்டாம் என்கிறது
என் மனம்.
10. Kathal kavithai
நீ விலகி செல்கின்றாய்
என
நினைக்கும் போதெல்லாம் கோபத்தில்
வார்த்தைகளை கொட்டி விடுகின்றேன்..!!
அதற்குள் ஒழிந்திருக்கும்
என் காதலின்
ஆழத்தை நீ உணர
மாட்டாயா..?
என்று மனது தவித்தாலும்
உரிமை இல்லாத
உறவு நீ
என்று உணர்த்துகின்றது..
எங்கோ ஓர் மூலையில் உனக்கான என் காதல்...
11. Kathal kavithai
எவ்வளவு
எடுத்து சொன்னாலும்.....
நீ என்னை
புரிந்து கொள்வதாய் தெரியவில்லை.....
என் பிரிவு தான்
அதை உனக்கு
உணர்த்தும் என்றால்....
எனக்கு பிரிவதிலும்
தயக்கமில்லை.....
நீயே முடிவு செய்.....
புரிந்து கொள்வாயா.....
இல்லை பிரிய செல்வாயா...?
12. Kathal kavithai
என் மரணத்தில் சுமக்கும்
அத்தனை வலிகளையும்
உன் மௌனத்தில் சுமக்கின்றேன்...!
என்னோடு பேசிவிடு .
13. Kathal kavithai
இன்னொரு பிறவி
வரை உன்னையே
நேசிப்பேன் என்
உயிர்
பிரிகின்றபோதும்
உன்னையே
சுவாசிப்பேன்.
14. Kathal kavithai
உன் அன்பை பத்திரமாக
என் இதயத்தில் வைத்து இருந்தேன்..
பின்புதான் தெரிந்து கொண்டேன்
உன் அன்புதான்
என் இதயத்தை
பத்திரமாக
வைத்திருக்கிறது என்று.. !!
15. Kathal kavithai
அவளுக்கு நான் கொடுக்க
வைத்திருந்த மலர் கூட வாடவில்லை
வருவாள் என்ற நம்பிக்கையில்
எங்கே வாடினால் என்
மனமும் வாடிவிடும் என்று
அதுவும் காத்திருக்கிறது..
No comments:
Post a Comment