வள்ளுவர்

திருவள்ளுவர், பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர்,

பழமொழிகள் விளக்கம் - 4


1. காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது.

பொருள்/Tamil Meaning:

நச்சரிக்கும் ஒருவன் தான் கேட்பதைப் பெறாமல் விடமாட்டான்.

2. ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது.

பொருள்/Tamil Meaning:

அவர் அடித்தாலும் பரவாயில்லை, ஏசினால் தாங்கமுடியாது என்பது பொருள்.

3. உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.

பொருள்/Tamil Meaning:

மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்று பாதிக்கப்பட்டவன் சொன்னது.

4. தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?

பொருள்/Tamil Meaning:

ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து.

5. கோல் ஆட, குரங்கு ஆடும்.

பொருள்/Tamil Meaning:

எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும்.

அதை தான் பெரியவர்கள், ஒழுக்கத்தை வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது; கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும் என்றார்கள்.

6. கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?

பொருள்/Tamil Meaning:

நன்றாகக் கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ?

அதாவுது, கல்யாணத்துக்கு முன்பு அம்மா அப்பாவை நேசிக்காத பிள்ளை, மணமாகிக் குழந்தைகள் பெற்ற பின்பு நேசிப்பது அரிது.

7. மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாது போனால் பரதேசம் போவேன்.

பொருள்/Tamil Meaning:

எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். அல்லது என்னை விட்டுவிடு, நான் தீர்த்த யாத்திரை போகிறேன்.

அதாவுது, வேறு நல்ல வேலைகள் காத்திருக்க, நீச, அற்ப விஷயங்களிலேயே குறியாக இருப்பவனைக் குறித்த பழமொழி.

8. ஒற்றைக் காலில் நிற்கிறான்.

பொருள்/Tamil Meaning:

விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது.

ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது.

9. ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா?

பொருள்/Tamil Meaning:

சிறிது சிறிதாக முயற்சி செய்தே ஒரு புகழ் தரும் செயலைச் செய்ய முடியும் என்பது பொருள். 

10. முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?

பொருள்/Tamil Meaning:

தலையில் முடி சூட்டியபின் அந்தத் தலையில் சுழியை ஆராய முடியுமா?
ஒருவரைப் பதவியில் அமர்த்திய பிறகு நொந்துகொண்டு பயனில்லை என்ற பொருளில் சொன்னது.




கம்பன்

கம்பர் இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்பர் இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.

கழுதையால் கிடைத்த பாடம்

கழுதையால் கிடைத்த பாடம்

ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார்.

முல்லா அவர்களே உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் என்றார் நண்பர்.

அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் அவர் கழுதையைத் தரவில்லை. தவிரவும் கழுதைக்கு சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார். அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்று முல்லா தீர்மானித்து விட்டார்.

நண்பரே என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் கொண்டு சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார். நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது.
 mulla 9
முல்லா அவர்களே கழுதை வீட்டில்தான் இருக்கிறது போலிருக்கிறதே யாரோ இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே என்ற நண்பர் வியப்புடன் கேட்டார்.

முல்லாவுக்குக் கோபம் வந்த விட்டது. நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். ஏன் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றார் எனச் சொன்னேன் என்றார்.

நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

பொம்மை நல்ல பொம்மை



பொம்மை நல்ல பொம்மை
புதுமையான பொம்மை
சொன்னதை கேட்கும் பொம்மை
சொக்காய் போட்ட பொம்மை
சிரிக்கும் அழகு பொம்மை
சிந்தை கவர்ந்த பொம்மை
கண்ணைச் சிமிட்டும் பொம்மை
கையை ஆட்டும் பொம்மை
மிடுக்காய் நிற்கும் பொம்மை
மிகவும் நல்ல பொம்மை

கொக்கரக்கோ கோழி

கொக்கரக்கோ கொக்கரக்கோ
கோழி கூவுது
கூரையிலே ஏறி நின்னு
கூவிப் பார்க்குது
குப்பை கூளம் கிளறிப்பார்த்து
இரையும் தேடுது
தரையில் கிடக்கும் தானியத்தை
கிளறி தின்னுது
விடியப் போகும் வேளையிலே
கூவி எழப்புது
கொண்டையத் தான் ஆட்டிக்கிட்டு
நம்மைப் பார்க்குது

குருவி

பஞ்சு போல் மேனியால்
பறந்து வரும் குருவியே
பக்கத்தில் வந்ததும்
பாசங் காட்டும் குருவியே
இரண்டு சிறிய கண்களால்
இரையைத் தேடும் குருவியே
இனிய கீச்சுக் குரலிலே
இசை பாடும் குருவியே
கோரைப் புற்கள் சுள்ளியால்
கூடு கட்டும் குருவியே
பொழுது சாயும் வேளையில்
கூடு திரும்பும் குருவியே
ஜோடியாக அன்புடன்
வாழ்ந்து வரும் குருவியே

மழையே மழையே வா வா

மழையே மழையே வா வா
மனதில் இன்பம் தா தா

பயிரை வளர்க்கும் மழையே வா
பசுமை கொஞ்சும் வளத்தைத் தா

குடிநீர் பஞ்சம் தீரவே வா
குளமும் கிணறும் நிரம்பவே வா

பஞ்சம் பட்டினி போக்கவே வா
பாரினில் செல்வம் சேர்க்கவே வா


பாரிஜாதம் – உன்னை கண்டனே

படம் : பாரிஜாதம்
பாடல் : உன்னை கண்டனே
இசை : தரண்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஸ்ருதி, ஹரிசரண்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உன்னை கண்டனே முதல் முறை
நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்..தான்
உன்னை கண்டனே முதல் முறை
நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்…தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டால் ஹய்யோ அய்யோ அய்யோ
அச்சம் வருதே தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே ஹய்யோ அய்யோ அய்யோ
சீ என்னவோ பண்ணினாய் நீயே
உன்னை கண்டனே முதல் முறை
நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்…தான்

எரிகிற மழை இது குளிருகிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அண்ணைக்கிற தீ இது
இன்னிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிரமுள்ள இருட்டு இது
மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ் இது
அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது
ஆஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே
எங்கினேன் நான் தேங்கினேன் எனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றரமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம் கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஓ காதல் என்னை தாக்கியதுதே
சரி தான் என்னையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாப்பிடுதே
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே

உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்..
ஹேய் ஹேய்

என்னோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
கோவில் உள்ளே கண் மூடி நின்றால்
உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சில் தோன்றுமே
நான் உன்னால் தான் சுவாசிகிறேன்
நான் உன் பேர் தினம் வசிக்கிறேன்
உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் ஹே ஹே
கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
உன்னை கண்டனே முதல் முறை
நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்…தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டால் ஹய்யோ அய்யோ அய்யோ
அச்சம் வருதே தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே ஹய்யோ அய்யோ அய்யோ
சீ என்னவோ பண்ணினாய் நீயே

எரிக்கிற மழை இது குளிருகிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அண்ணைக்கிற தீ இது
இன்னிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிரமுள்ள இருட்டு இது
மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ் இது
அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது
ஆஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே
எங்கினேன் நான் தேங்கினேன் எனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றரமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல்
மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல்

காதல் வாழ்க்கை

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.

பழமொழிகள் விளக்கம் - 10

1. நனைத்து சுமக்கிறதா?

பொருள்/Tamil Meaning:

பாரம் உலர்ந்திருக்கும்போது அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம்.

இப்போதைக்குப் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. வீட்டின் மராமத்து வேலகளை இப்போதைக்கு அவ்வளவு மோசம் இல்லை என்று ஒத்திப்போடுபவனுக்கும் இது பொருந்தும். முன்னவனுக்கு அவன் தவறும் பின்னவனுக்கு அவன் செலவும் நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி.

2. கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.

 பொருள்/Tamil Meaning:

கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம்.

இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும் நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது கூடாது என்பது செய்தி.

3. ஆகட்டும் போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடப்போறேனோ?

 பொருள்/Tamil Meaning:

தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது.

மனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…

படம்    : மனம் கொத்திப் பறவை
இசை    : டி. இமான்
பாடலாசிரியர்  : யுகபாரதி
பாடியவர்கள்  :  டி. இமான்
—-
ஜல்… ஜல்… ஜல் ஓசை  
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள  
ஜல்… ஜல்… ஜல் ஓசை 

நில்… நில்… நில்… பேச  
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் பிள்ள  
நில்… நில்… நில்… பேச
 
இருவிழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியலே  
இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல  
ராவாகி போனாலே  
கண்ணுமுழி தூங்கலே  
பேசாம நீ போனா  
நெஞ்சுக் குழி தாங்கல  
உன்னால தன்னால சொக்குறேன்   சொக்குறேன் நான்  
ஜல்… ஜல்… ஜல் ஓசை  
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள  
ஜல்… ஜல்… ஜல் ஓசை 

நில்… நில்… நில்… பேச  
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் பிள்ள  
நில்… நில்… நில்… பேச

வானவில்லே தேவையில்லை  
நீயிருந்தா போதும் புள்ள  
சந்திரனும் நீயே சூரியனும் நீயே  
நந்தவனம் பூவெல்லாம் நீயே நீயே  
நட்சத்திர மீனெல்லாம் நீயே நீயே
  
எப்போதும் தீராத செல்வம் நீயே  
எங்கேயும் காணாத தெய்வம் நீயே
  
முன்னாடி பின்னாடி சொக்குறேன்   சொக்குறேன் நான்   

ஜல்… ஜல்… ஜல் ஓசை  
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள  
ஜல்… ஜல்… ஜல் ஓசை 

நில்… நில்… நில்… பேச  
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் பிள்ள  
நில்… நில்… நில்… பேச… பேச

நீ நடந்து போக கண்டா
பூமி பந்தே  நூறு துண்டா
சுத்திடுமே உன்னை  
வெச்சிடுமே கண்ணை 

வந்த வழி மாறாமா நீயும் போனா  
நிக்கிறனே ஆடாம கோயில் தூணா
  
எங்கே நீ நின்னாலும் எல்லைக்கோடு  
உன்னால பூ பூக்கும் பொட்டல் காடு
  
ஒட்டாரம் பண்ணாதே   
சொக்குறேன் சொக்குறேன் நான்?
ஜல்… ஜல்… ஜல் ஓசை
ஜல்… ஜல்… ஜல் ஓசை
இருவிழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியலே  
இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல  
ராவாகி போனாலே  
கண்ணுமுழி தூங்கலே  
பேசாம நீ போனா  
நெஞ்சுக் குழி தாங்கல  
உன்னால தன்னால சொக்குறேன்   சொக்குறேன் நான்   

அம்மா

அம்மா

அன்னை

அன்னை
அன்னை... 
அவள் என் பசியாற்றி அவள் பசி மறந்தாள்... 

அவள் உதிரம்கொண்டு என் சரிதம் செய்தால்... 

அவள் அணைப்பில் அனைத்தையும் எனக்கு தந்தால்.. 

அவள் என்னை திட்டியதை விட திருத்தியதே பழக்கினால்... 

அவள் சுவாசகாற்றால் என்னை சுண்டி இழுத்தால்... 

அவள் முத்தம் ஒன்றாலே என்னை மூற்சையாக்கி விடுவால்... 

அவள் என் அசைவை கொண்டே அர்த்தம் காண்பாள்... 

அவள் இல்லையேல் நான் இங்கு இல்லை... 

அவள் தரும் அன்பை போல இவ்வுலகில் சிறந்ததும் ஏதுமில்லை. .. 

அவள் தான் என் அன்னை

󾓷தாய்மை󾓷

󾓷தாய்மை󾓷
󾓷தாய்மை󾓷 

எந்த பெண்ணும் படித்து பெறாத பட்டம்!!!!


அம்மா

என்தாய் 
என்னை வித்தாய் வாங்கினாய்; 
உதரத்தில் முத்தாய் தாங்கினாய்; 

உன் உதிரமே உணவாய்; 
நாளும் எனக்கு ஊட்டினாய்; 
உயர்பண்புகளை உள்ளெங்கும் 
உதிராது தீட்டினாய்; 

மெத்தையில் கிடத்தினாய்; 
முத்தத்தை உடுத்தினாய்; 
வளர்ந்தாய்; வளர்த்தாய்; 
எனக்காய் 
உழைத்தாய்; இளைத்தாய்; 
எனக்காய் பிறந்தாய்; 
அனைத்தும் துறந்தாய்; 

அன்பாய்; தீமைகள் தழுவும்போது அம்பாய்; 
அத்தனையும் அளித்தாய்; என் 
அகிலத்தின் ஒளித் தாய்; 
தாயே! 
இம்மையில் எனை பிள்ளையாய் ஈன்றெடுத்தாயே... 
எம்மையிலும் எனையே பிள்ளையாய் ஈன்றெடு தாயே

அம்மா

அம்மா
பசி என்னவென்று எனக்கு தெரியாது- ஆனால் பசிக்கு உன்னை நன்றாகத்தெரியும் !!!

கண்ணம்மா

கண்ணம்மா இந்த 
ஒற்றை சொல்லில் தானடி 
நான் முழுமையானேன் நீ 
அம்மா என்கையில் 
நான் என்னை மறக்கிறேன் 
உன்னையே நினைக்கிறேன் 
நீ வாழ நான் வாழ்கிறேன் 
வளர்பிறை நிலவே 
வாழ்வாய் பல்லாண்டு 
வாழ்த்துகிறேன் தாயன்போடு


உள்ளேன் அம்மா

இவை என் வரிகள் அல்ல.... 
அன்னியமண்ணில் ஆண்டாண்டுகளாய் 
சாமர்த்திய வேள்வியைச் சந்ததி நலனுக்காய் 
சப்தமின்றிச் செய்யும் அன்புச் சொந்தங்களின் 
அச்சேறிய அகவரிகள்.... 

திரைக்கடல் ஓடித் திரவியம் தேடி 
கடனடைத்து கைப்பொருள்சேர்த்து 
குடிசையை மாடியாய் உவப்புடன் உயர்த்தி 
சகோதரிகளுக்குச் சம்மந்தம்பேசி சடங்குகள் செய்வித்து 
மொய்முறைகள் தழுவி தலைநரை கூடினும் 
அகவைகள் ஏறினும் (கேம்ப் – சிங்கை) எழுத்தாகி 
அழைப்பிதழில் மட்டும் அலங்கார அச்சாகி 
உள்ளூர் நினைவுகளில் ஊன்றித் திளைத்து 
அலைபேசி வார்த்தைகளில் அடிக்கடி இளைப்பாறும் - என் 
அன்புச் சொந்தங்களுக்கு.......... 
சமர்ப்பணம்... 

தாயின் அன்பு

மாறிவரும் உலகில் 
மாறாமல் இருப்பது 
தாயின் அன்பு மட்டுமே! . . . . . . . .

அன்னை மாடி தாலாட்டு



அன்னை மாடி தாலாட்டு
பாலூட்டி சீராட்டி பாட்டுப் பாடி
உறங்கவைத்த
அன்னை மாடிக்கு ஈடாகாது எந்த மடியும் . 


அத்தனையும் அழகு தான் அம்மாக்களுக்கு

[] அத்தனையும் அழகு தான் அம்மாக்களுக்கு ...

முகச்சுழிப்புகளில்
அழகிழந்துவிட கூடுமென்று
வேறு யாரையும்
அள்ளச்சொல்வதில்லை
அம்மாக்கள் ..
தன்
மழலையின் மலத்தை ! 

அம்மா சொன்ன பொய்

'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*

பழமொழிகள் விளக்கம் - 3


1. இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.

பொருள்/Tamil Meaning:

நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான் என்று ஒரு மாமியாரின் அங்கலாய்ப்பு இது!

2. இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.

பொருள்/Tamil Meaning:

இடுதல் என்றால் கொடுத்தல். இங்கு வேலை செய்துகொடுப்பது என்று பொருள். தொடுதல் என்றால் தொடங்குதல். இங்கு வேல்களைத் தொடங்கி உதவியவர்கள் என்று பொருள்.

அதாவுது, கொடுத்தவர்கள், உதவியவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கிவிட்டுப் புதிதாக வேலைக்கு வந்தவர்களை நல்லவர்கள் என்று பழைய வேலையாட்களின் மனக்குறையாக வெளிப்படும் சொற்கள்.

3. அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.

பொருள்/Tamil Meaning:

தன் கல்யாணத்துக்கு கூட செலவு செய்யாத கஞ்சன் ஒருவனை பார்த்து கூறுவது.

4. பட்டும் பாழ், நட்டும் சாவி.

 பொருள்/Tamil Meaning:

நெல்மணிகள் திரண்டு காய்க்காமல் வெறும் வைக்கோலாகவே உள்ள கதிர்களுக்குச் சாவி என்ற பெயர்.

நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. நான் நட்ட பயிரும் நெல்மணிகள் திரளாமல் பதராயிற்று என்பது பொருள்

5. கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.

பொருள்/Tamil Meaning:

ஒரு உழக்கு என்பது கால் படி.  ஒரு உழக்குப் பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு!

கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானனக் குறித்து அவன் வேலையாள் சொன்னது.

6. ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?

பொருள்/Tamil Meaning:

பெண் ஆண்வேடம் போட்டால் மீசை வைத்துக்கொள்வது எளிது. ஆனால் ஆண் பெண்வேடம் போட்டால்? ஒருநாளைக்கு மட்டும் போடும் பெண் வேஷத்துக்காக நான் என் மீசையை இழக்கவேண்டுமா?மீசை என்பது தமிழ் நாட்டில் ஆண்மையின் அடையாளம்.

அதாவுது, சின்ன லாபத்துக்காக ஒரு அரிய உடைமையை எப்படி இழப்பது என்பது கேள்வி.

7. இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!

பொருள்/Tamil Meaning:

பசியால் வாடிய சிவனடியார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றபோது அங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்று சென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்று நினைத்து. ஏமாற்றத்தால் அவர், இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா? என்று சொன்னது.

8. கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.

பொருள்/Tamil Meaning:

கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும். அதாவுது, விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்ச்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும் என்பது கருத்து.

9. கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குருதட்சணையா?

பொருள்/Tamil Meaning:

குறுணி என்பது எட்டுப்படி கோண்ட பழைய முகத்தல் அளவை. ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்குக் குறுணியில் மோரும் கொடுத்து குருதட்சணை செய்வார்களா?

அதாவுது, தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது கருத்து.

10. சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

பொருள்/Tamil Meaning:

வைத்திய செலவு சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் செலவு ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப் படுகிறது.




Popular Posts