காதல் கவிதை -13

Kadhal Kavithai for your sweet heart


1.Kadhal Kavithai

நீயாகத்தான் என்னை 

நினைக்கவில்லையென்றாலும் 
நானாக ஞாபகபடுத்திய 
பின்பும் கூடவா என்னை 
நினைக்க தோன்றவில்லை 
உனக்கு. !!


2. Kadhal Kavithai

நமக்கு மிக
நெருக்கமானவர்களுக்கு
மட்டுமே தெரியும் 
நம்மை எங்கே அடித்தால் 
வலிக்கும் என்று.....!!!!

3. Kadhal Kavithai

கண்கள் வாங்கிய வலிகளை 
இதயம் சுமப்பதுதான் காதல்....
இதயம் சுமக்கும் வலிகளை 
கண்கள் வெளியிடும் உணர்வுதான் 
கண்ணீர்......

4. Kadhal Kavithai

விலகி போகிறாய் என்றுதான்
நெருங்கி வந்தேன் அன்று
வெறுத்து போகிறாய் என்று தெரிந்திருந்தால ்
நிச்சயம் வற்புறுத்தி இருக்க மாட்டேன்
உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்...!

5. Kadhal Kavithai


நீ எனக்காக விட்டு சென்றவை
அழகான தோல்விகள்,
சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்,
முரண்பாடான உணர்வுகள்,
மெல்லிய உன் புன்னகை,

என்னோடான உன் பயணங்கள்,

நலம் விசாரிப்புகள்,
எனக்கான உன் கண்ணீர்,
விரும்பிய இதயம்,
உன் முதல் ஸ்பரிசம்,
உன்னுடன்
கடந்து சென்ற தூரங்கள்,
நனைந்த முதல் மழை,
என்றும் அழியாத நினைவுகள்,
மறக்கவில்லை எதையும்
இவைகளோடு காத்திருக்கிறேன்
இன்றும்.........உனக்காக!!

6. Kadhal Kavithai

வெறுத்து போகிறவரை 
விரட்டிப் பிடிப்பது தவறு என்று 

அறிவுக்கு தெரிந்தாலும் 

இதயத்திற்கு தெரிவதில்லை. !

7. Kadhal Kavithai


உன்னை விட்டு பிரிந்தபிறகும்

தினம் ஒரு கவிதையை,

தினம் ஒரு காட்சியை இனிய கனவாக
கற்பனையுடன் என்னுள் மலர
வைத்துக் கொண்டிருக்கிறது..
என் மீதான உன் காதல்.


8. Kadhal Kavithai

உன்னோடு ...

வாழ வேண்டும் என்ற

எண்ணத்தில் ..
நான் உனக்காக
கட்டிய கனவுகள் பல
...இன்று அவை
மண்ணோடு மண்ணாக ...
எனை பார்த்து சிரிக்கின்றன..
சிரிப்பது
என் கனவுகள் மட்டுமல்ல
சில உறவுகளும் தான்..

9. Kadhal Kavithai

நேசிக்கும் போது,ஆழமாய் நேசிப்பதும்

வெறுக்கும் போது,ஆழமாய் வெறுப்பதும்

நாம் உயிருக்கும் மேலாய்நேசிக்கும ்
உறவுகளால் மட்டுமே முடியும்.!!

10. Kadhal Kavithai

மழலைகள் பிறப்பிலும் சிரிப்பிலும் 

உள்ள சந்தோசம் 

மன நிம்மதியின் மாளிகை....

11. Kadhal Kavithai

அன்று நீ என்னை சந்தேகப்பட்டு சண்டைகள் போட்டாலும் சாதாரனமாய் எடுத்து கொண்டேன்..! 
இன்று நான் உன்னை சந்தேகப்படவும் இல்லை, சண்டைகள் போடவும் இல்லை..! 

ஆனால் சாதாரனமாய் சொல்லி விட்டு சென்று விட்டாய்

என்னை மறந்து விடு என்று..!

12. Kadhal Kavithai

எல்லோரிடமும் அன்பை காட்டி 

ஏமாந்து விடாதே. . 

யாரிடமும் அன்பை காட்டி 
ஏமாற்றி விடாதே. . !

13. Kadhal Kavithai

கண்ணுக்குள் இருக்கும்

உன்னை

என் கண்ணீரால் கழுவுகின்றேன்,
காதலித்து கைவிட்ட கறை கூட
உன்மேல் இருக்க வேண்டாம் என்று...!!

14. Kadhal kavithai

நீ என்னை பார்க்கிறாய்

என்பது உண்மை

நீ என்னை நேசிக்கிறாய்
என்பதும் உண்மை
நீ என்னை பிரியமாட்டாய் என்பதுதான் உண்மையாக இருக்க
வேண்டும்
அதைத்தான் நான் அதிகம்
விரும்புகிறேன்..

15. Kadhal Kavithai

மறக்க நினைக்கிறேன்...

உன்னை அல்ல..

உன்னோடு சண்டையிட்ட - அந்த
நிமிடத்தை...மன்னிப்பது! ...
மன்னிக்காமல் இருப்பதும்
உன் காதலை பொருத்து!

No comments:

Post a Comment

Popular Posts