காதல் கவிதை
love tamil kavithai
1. Love Tamil Kavithai
காத்திருந்தால் உன்னைக் காலமுள்ளவரை சேர்ந்திருக்கலாம் என்றால், நான் காத்திருப்பேன் உனக்காக.. என் கண்களை காவல் வைத்து...
2. Love Tamil Kavithai
இப்பொழுதெல்லாம் உன்னை அதிகம் நினைப்பதை நிறுத்திக்கொள்கிறேன்.. ஏனென்றால் ,,, பல வழிகளில் நான் பாரமான வலிகளை சந்திக்க நீயும் ஒரு காரணமாகி விட்டாய்..... உன்னை நினைக்கும் போதெல்லாம் நீ தந்த மாற்றங்களும் ...
ஏமாற்றங்களும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றது .... என் மனதை மட்டுமல்ல வாழ்க்கையையும் தான் இதனால் உன்னை நினைக்க நினைக்க உன்னை வெறுத்து விடுவேனோ என்ற பயம் எனக்குள்..... அதனால் தான் அடிக்கடி நினைப்பதை அடியோடு மறந்து விட்டேன்....
3. Love Tamil Kavithai
திருமணமான ஒரு ஆணின் அன்பு இரு பெண்களிடம் இருக்கும்....... ஒன்று பெற்ற தாய்... மற்றது கட்டிய மனைவி.... ஆனால், திருமணமான ஒரு பெண்ணின் அன்பு முழுவதும் ஒரு ஆணின் மீது மட்டுமே இருக்கும்....... அது அவளைக் கரம் பிடித்த காதல் கணவனிடம் மட்டுமே! கணவனுடன் கானகம் சென்ற சீதையும் காதலனுக்காக காத்திருந்த தமயந்தியும் கதைகளில் கண்ட நிஜங்கள்.... சில சமயம் ஒரு தாயின் அன்பையும் கடந்து விடுகிறாள் ஒரு தாரம்.... பல சமயம் ஒரு தாயாகவே மாறி விடுகிறாள்..... மனைவியின் அன்பை மிஞ்சியது எதுவும் இல்லை....
4. Love Tamil Kavithai
உண்மையான அன்பு உள்ளத்தில் மட்டுமல்ல உணர்வுகளிலும் கலந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் உறவுகளில் கூட ஒரு உயிரோட்டம் இருக்கும்..
5. Love Tamil Kavithai
நினைக்க பல உறவுகள் இருந்தாலும் தன்னை மறந்த உறவையே மீண்டும் மீண்டும் நினைக்கத் தூண்டும் மறக்க முடியாத நினைவுகள் தான் மறந்த பின்பும் உயிர் வாழ வைக்கிறது நம் நினைவுகளை.
6. Love Tamil Kavithai
காலங்கள் நகர்ந்ததை விட என் கண்கள் நனைந்த நாட்கள் தான் அதிகம்.... நான்கு நிமிட மௌனத்தில் நாம் என்ற உறவையே நான் என்று ஆக்கிவிட்டாய்.... இதற்கு மேல் சொல்ல என்னிடம் வார்த்தைகளும் இல்லை என் வாழ்கையும் இல்லை... நீ வாழ்ந்து விட்டு வந்து சொல்லு நீ வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று.....
7. Love Tamil Kavithai
உன்னை எனக்கு நினைக்கவும் தெரியும் நினைத்த உன்னை நீ பிரியும் நொடியில் மறக்கவும் தெரியும்.... ஆனால், மறந்த பின் என் உயிர் இறந்தும் விடும் என்பதை நீ அறிவாயா?
8. Love Tamil Kavithai
உன் உறவினில் வாழ்ந்த நான் உன் பிரிவினில் வாழ்ந்த நான் உன் அன்பினில் வாழ்ந்த நான் உன் துயரினில் வாழ்ந்த நான் உன் காதலில் வாழ்ந்த நான் உயிர் பிரிந்த பின்பும் உனக்குள்ளே வாழ்வேன் உருவம் இல்லா பொருளாக...
9. Love Tamil Kavithai
சூரியன் வரைந்த ஓவியம் என் நிழல் என்றாய்.... பனித்துளி விழும் ஓசை என் குரல் என்றாய்...... பாலில் செய்த நிலவு என் வதனம் என்றாய் ஆனால், உன்னால் உருவான உலகம் என் இதயம் என்று உனக்கு ஏன் இன்னு புரியவில்லை....
10. Love Tamil Kavithai
என்னில் வந்த காதல் என்னை எனக்கே புரிய வைத்தது எனக்குள் உன்னை பதிய வைத்தது எண்ணிலடங்காத எண்ணங்களை என்னிடத்தில் தந்து விட்டது எப்பொழுதும் உன் நினைவுகளை என் மனதில் எரிய விட்டது இன்று என் எதிர் காலம் உன் எதிரில் மட்டும் தான் என்று உன்னையே எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..... எனக்காக அல்ல நமக்காக....
|
No comments:
Post a Comment