Amma(அம்மா) Kavithai
1. Amma(அம்மா) Kavithai
உனக்காய் துடித்த ஓர் இதயம்.!
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்.!
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்.!
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்.!
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்.!
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்.. !
அம்மா
2. Amma(அம்மா) Kavithai
ஒரு எதிர் பார்ப்பும் இல்லாத உறவு இவ்வுலகில் ஒன்று இருக்குமானால்
அது தாய் உறவு மட்டுமே...
3. Amma(அம்மா) Kavithai
அம்மா அப்பாவின் அன்பிற்கு நிகராக நம்மீது
ஒரு அன்பு கிடைக்குமெனில்
அது தாத்தா பாட்டியின்
அன்பே
4. Amma(அம்மா) Kavithai
குழந்தையின் அழுகுரல்
வாத்தியாரின் அதட்டல்
இளஞனின் விசில்
தாயின் தாலாட்டு
சிற்பியின் உளியில்
சில்வண்டின் சலசலப்பு
உறக்கத்தில் குறட்டை
உண்ணும் போது விக்கல்
எத்தனை ஓசை இருந்தென்ன லாபம்
கருவறை உறக்கத்தை கலைக்காமல் எனக்காய்
கவி பாடிய என் தாயின் இதய துடிப்பு அல்லவா ஓசை!
5. Amma(அம்மா) Kavithai
வீட்டில் உள்ள பொருளை
"அம்மாவால்"
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்
"அது"
தொலைந்து விட்டதாக அர்த்தம்
6. Amma(அம்மா) Kavithai
அம்மா
கடைசி தோசை சாப்பிடும் போது,
சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து
சட்னியை காலி செய்ய சொல்லி,
இன்னொரு தோசை வைக்கிறதுதான் அம்மாவின்
பாசம்.
7. Amma(அம்மா) Kavithai
அப்பாவின் கோர்ட்டில்
குற்றவாளியாக
நாம் நிறுத்தப்படும் போதெல்லாம்
எப்பொழுதும் பிள்ளைகளின் சார்பாக
வாதிடும் வக்கீலாக அம்மா
முடிவில்
அவ்வழக்கே தள்ளுபடி செய்யப்படுகிறது .
8. Amma(அம்மா) Kavithai
தந்தையின் தோள் மீது அமர்ந்து காணும் உலகமும்,
தாயின் இடுப்பில் அமர்ந்து காணும் உலகமும் வெவ்வேறானவை...
9. Amma(அம்மா) Kavithai
ஆயிரம் நிலவுகள்
வாழ்வில்
வந்து மறைந்தாலும்
ஒற்றை சூரியனாய்
என்று பிரசாகம் வீசம்
அம்மா உன் அன்பு
10. Amma(அம்மா) Kavithai
ஒவ்வொரு வலிகளிலும்
அன்னையின் மடியை
தேடுகிறது இதயம் !
அன்னையை தவிர இந்த
உலகத்தில் உண்மையான
பாசம் வைக்க வேறு
ஆள் இல்லை !
மேலும் இதுபோன்ற கவிதை வரிகளை படிக்க 👇
ReplyDeleteAmma kavithai in tamil