காதல் கவிதை -9

காதல் கவிதை


Tamil kavithai love


1. tamil kavithai love 

என் கண்களில் உன் விம்பம் தந்த
கனவுகள் எனக்கு இன்பம்தான்
ஆனால்,
கனவுகளில் மட்டும் கடந்து செல்லும்
காதலில் காத்திருப்பது
கடும் துன்பம் என்பதை நீ உணர்வாயா 

2. tamil kavithai love 

திருடப்பட்ட இதயம்
திருடிய பின் தான் அந்த
திருடனை அறிந்துகொள்ளும் ....
திருடுதல் தவறு என்றாலும்
திருட்டை செய்த அந்த
திருடனையே ஏற்றுக்கொள்ளும்
திருட்டுக் குணம் தான் இந்த காதல்.
3. tamil kavithai love 

அன்பே!!!
இன்று வரை எனக்கு
இந்த சந்தேகம் இருந்துகொண்டுதான்
இருக்கின்றது....
என்ன தெரியுமா?
ஏன் உயிர் எழுத்துக்களில் 
நீ என்ற எழுத்தை
இன்னும் சேர்க்கவில்லை......?
" நீ " தானே என் உயிர் எழுத்து !!!  
4. tamil kavithai love 

உள்ளம் என்ற இடத்தில்,
உன் நினைவு மறையும் போது,
நான் இறந்து போகிறேன்,

ஏன் தெரியுமா.....!



என்னுள் நீ ,
நினைவாக இல்லை,

உயிராய் இருக்கிறாய்...!
5. tamil kavithai love 

மறக்கப்படும் அன்பும்
மறுக்கப்படும் அன்பும்
மரணத்தைவிட கொடுமையானது ...
6. tamil kavithai love 

பதறிய காரியம் சிதறும் என்பார்கள்
ஆனால்,
உன்னைப் பார்த்த அந்த நொடியில்
சிதறி விட்டது என் இதயம்...
இமைக்க மறுக்கும் கண்களுக்கும்
இதயம் துடிக்கும் காதலுக்கும் 
நடுவில்
காணாமல் போன உன் நினைவுகளை
கண்டு கொள்வது கடினம் தான்.....
கரைந்து விடும் காலங்களுக்கு மத்தியிலும்
உனக்காக காத்திருப்பதும்
ஒரு சுகம் தான் எனக்கு....
7. tamil kavithai love 

மரணம் வந்தாலும்
உன்னை மறக்காத இதயம் வேண்டும்...
ஜனனம் ஒன்று இருந்தால் அதில்..
நீயே வேண்டும்
உறவாக அல்ல..
உயிராக..
8. tamil kavithai love 

உன் வருடும் பார்வைகளால்........
திருடப்பட்ட என் இதயம்.....
தித்திக்கும் உன் நினைவுகளை மட்டுமே
இப்போது சிந்திக்கின்றது......
9. tamil kavithai love 

தித்திக்கும் உன் நினைவுகளை
சந்திக்கும் போதுதான்
காத்திருக்கும் வலிகள் கூட
காணாமல் போய் விடுகின்றது.......
என் கனவுகள் நீயாக இருக்கும் வரை
என் கவிதைகள் உன் பெயர் சொல்லும் 
இது விதியின் செயல் அல்ல
நீ செய்த மாய வலை ..
10. tamil kavithai love 

உன்னைத் தேடும்
என் விழிகளை வேண்டுமானால்
ஏமாற்றி விடலாம்.....
ஆனால்
உன்னில் நான் தொலைத்து விட்ட
என் இதயத்தை 
எப்படி நான் ஏமாற்றுவது?
உன்னில் நானும்
என்னில் நீயும்
என்று இந்த மண்ணில்
எண்ணி வாழ்வதே
என் விதி என்று இருந்தால்...
என் கண்ணில் உன்னை வைத்து
கன்னியாகவே வாழ்ந்திடுவேன்.....
நான் கண் மூடும் வரை...
11. tamil kavithai love 

உன் இரண்டு நிமிட மௌனத்தில்
என் இருண்டு போன இதயம்
மீண்டும் இறந்து போக நினைக்கவில்லை....
மாறாக
உன்னைப் பிரிந்து வாழ்ந்த
அந்த நொடிகளில் 
உன்னில் புரிந்து கொள்ள வேண்டிய
பல விடயங்களை நான் அறிந்தும் கொண்டேன்...
உனக்கே உரிமையான என் வாழ்க்கை
என்றும் உனக்காகவே உயிர் வாழ்கிறது...
உன்னை மட்டுமே உயிராக
நேசிக்கவும் செய்கிறது.....
சுவாசிக்கவும் செய்கிறது....
12. tamil kavithai love          

இரவுக்கும் உன் இதயத்திற்கும்
நிறம் ஒன்று என்பதை
நீ சொன்ன வார்த்தையில் அறிந்து கொண்டேன்
என்ன என்று கேட்கிறாயா?
அதுதான்
இதுவரை இருந்த நம் காதலை 
இன்றுடன் மறந்து விடுவோம்....
இதை சொல்ல உனக்கென்றால்
ஒரு நிமிடம் தேவைப்பட்டிருக்கலாம்
ஆனால்.
இதை ஏற்றுக்கொள்ள எனக்கு
ஓராயிரம் ஜென்மங்கள் போதாது
என்பதை நீ அறிவாயா? 

No comments:

Post a Comment

Popular Posts