1. Love Kavithai
என்னைப் பிரிய மனமில்லாமல்..... பிரிந்து சென்றாய்..... அந்த பிரியும் தருவாயிலும் நீ என்னை புரிந்து கொண்டதால் தான், இன்று வரை என்னைப் ப்ரியமுடன் நேசிக்கிறாய்.... பிரிவிலும் உன் பிரியத்தை நேசிக்கிறேன்... நீ தூர இருந்தாலும் உன் அன்பு மட்டும் இன்னும் ஆழமாகவே இருக்கின்றது... இன்று உன் பிரிவையும் நேசிக்கிறேன் அதில் நான் கண்ட உன் பிரியத்தையும் நேசிக்கிறேன்... என் முகத்தில் புன்னகையைத் தந்த உனக்காக இந்த உயிர் எப்பொழுதும் காத்திருக்கும் உனக்காகவே.....
2. Love Kavithai
கண்கள் வாங்கிய வலிகளை இதயம் சுமப்பதுதான் காதல்.... இதயம் சுமக்கும் வலிகளை கண்கள் வெளியிடும் உணர்வுதான் கண்ணீர்....
3. Love Kavithai
பச்சை நிற ரோஜாக்கள் பார்ப்பதற்கு அரிது என்ற போதும் பறிப்பதற்கு ஆசைதான்.... அது போல் பாசமுள்ள உனது வருகை வாரத்தில் ஒரு நாள் என்றாலும் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் வாழவே ஆசைப்படுகிறது என் இதயம்....
4. Love Kavithai
சோகங்களே மேகங்களாகும் போது சொந்தங்களும் தூரமாகி விடுகின்றது......... என் கவலைகளை கரைத்து விடும் சக்தி கண்களுக்குத்தான் உண்டு என்றால்...... கண்ணீரை கடன் வாங்க நான் கடல் கடந்து செல்லவும் தயார்..... காரணமின்றி வரும் கஷ்டங்களும் கை நழுவிப்போன காலங்களும் காலத்தின் கோலங்களே !
5. Love Kavithai
உன் அன்பில் உயிர் வாழ்கிறேன்..... உன் வார்த்தையில் வண்ணமாகிறேன்... உன் பார்வையில் என் பாதையை காண்கிறேன் உன் கோபத்தையும் குறைவில்லாமல் ரசிக்கிறேன் இன்று உன் பிரிவில் என் வலியை உணர்கிறேன்.... என்று உன் வருகை என என் விழிகளை வழிகளில் வைத்து காத்திருக்கிறேன்... காதலுடனும் கற்பனைகளுடனும்....
6. Love Kavithai
புன்னகையின் விலை என்னவோ புரியாத புதிர்தான் ஆனால் நீ புன்னகைக்கும் போதுதான் புரிகிறது புன்னகைக்கும் விலை உண்டு என்று...
7. Love Kavithai
மனசு வலித்தால் மரணம் வரை நீடிக்கும் ஆனால் இதயம் வலித்தால் இன்னொரு ஜீவனை தேடும் வரை மட்டுமே வலி தெரியும் .....
8. Love Kavithai
அன்பை தேடும் தருணங்களில் அரை நிமிட ஏமாற்றங்கள் கூட ஆயுள் தண்டனைகளாக மாறி விடுகின்றது ஆயுள் தண்டனையில் சிக்கித் தவிக்கும் நான் உன் அன்பான இதயத்தில் மட்டுமே ஆயுள் கைதியாக இருக்க ஆசைப் படுகிறேன்.... என்னை சிறை வைப்பாயா உன் இதய அறையில்? வார்த்தைகள் தேவை இல்லை உன் வாழ்க்கையை வரமாக தந்தால் போதும் நான் வாழ அல்ல நாம் வாழ ...
9. Love Kavithai
உன் பார்வையில் என் வாழ்வின் பாதையை அறிய வைத்தாய்.. பகலிரவை பகிர்ந்து கொள்ள உன் பாதி வாழ்வைப் பரிசளித்தாய் புன்னகையுடன் நான் இருக்க உன் மீதி வாழ்வையும் எனக்காக எழுதி வைத்தாய் எப்பொழுதும் உன் நினைவில் நான் இருக்க உலகமே எனக்கு நீயாகியது உன்னைக் காணாத இரவுகளில் என் கண்கள் உறங்கவில்லை உன்னைக் கண்ட பொழுதுகளில் என் இமைகள் மூடவில்லை எனக்கான என் வாழ்க்கை முழுவதும் உனக்காக உரிமையாகிவிட்டது உன் இதழ்கள் சேர்ந்து என் கன்னம் தொடும் நேரம் நம் இனிய காதலுக்கே ஒரு கவிதை உருவானது போல் இருக்கும் நீ இன்றி என் வாழ்வும் இல்லை எனக்கு வாழவும் வழி இல்லை. என் எதிர் காலமும் நீதான் என் எதிர் பார்ப்புகளும் நீ தான்... நிம்மதியான ஒரு நிமிடம் கூட உன் நினைவில் தான் .....எனக்கு... உன்னுடன் தான் என் வாழ்க்கை என்று ஆன அந்த நிமிடம் என் ஆன்மாவையும் சேர்த்து விட்டேன் உன் ஆயுளுடன் ........
10. Love Kavithai
தாங்கிக் கொள்ள முடியாத தனிமைகளையும் தவறுகளே செய்யாமல் தண்டணைகளையும் இன்று நான் ஏற்றுக்கொள்ள காரணமாகிய என் ப்ரியமானவனே !! உன் பிரிவுதான் என்னை எரித்துக்கொண்டிருக்கின்றது என்பதை எப்பொழுது நீ புரிந்து கொள்வாய்? நீ புரிந்து கொள்ளும் நிமிடத்தை நான் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் ஏனென்றால் அந்த நிமிடம்தான் என்னை அர்த்தமாக்கி விடப் போகிறது!
11. Love Kavithai
உன்னுடன் பேச நினைக்கும் போது உன்னுடன் எதைப் பேச என்று தெரியவில்லை எப்படி பேச என்று தெரியவில்லை பேச வரும் நேரத்தில் பேச்சு வரவில்லை பேசாமல் சென்று விடவும் மனம் இல்லை ஆனால், உன்னுடன் பேசிக்கொண்டே என் நாட்கள் நகர வேண்டும் .... உன்னுடன் பேசாத கனங்கள் என் பேச்சுக்கே அழகில்லையடா .... அதனால் ஒரு வார்த்தையேனும் பேசிச் செல்கிறேன் என் வார்த்தைகளே நீ தானே!
12. Love Kavithai
என் அத்தனை காயங்களையும் ஒரு நொடியில் ஆற்றி விடும் உன் ஓரே ஒரு வார்த்தை ஐ லாவ் யூ டீ செல்லம் ....
13. Love Kavithai
உயிர் ஒரு ஓவியம் என்றால், என் உயிரை வரைந்த நீ ஒரு ஓவியன் தான்...
14. Love Kavithai
பிரியமான உன் அன்பில் அடைபட்டு விட்ட நான் உன்னைப் பிரிய மனமில்லாமல் உன்னில் பிரியமானவளாகி விட்டேன்.... இன்று பறந்து செல்லும் பறவைகளின் பாசத்தை உணர்கிறேன் உன் நேசத்தில் ....
15. Love Kavithai
கண்கள் வாங்கிய வலிகளை இதயம் சுமப்பதுதான் காதல்.... இதயம் சுமக்கும் வலிகளை கண்கள் வெளியிடும் உணர்வுதான் கண்ணீர்....
|
No comments:
Post a Comment