கனவுகளை காப்பாற்ற



கனவுகளே காணத் தெரியாமல் 
இருந்த காலமுமுண்டு. 
ஆசை துகள்களாக ஆரம்பித்து 
கனவுகளாக உருவெடுத்தது. 
கனவுகள் காலப் போக்கில் 
லட்சியங்களாக மாறிக்கொண்டது. 
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின் 
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது. 




பல இன்பங்களை விட்டுக்கொடுத்து 
எண்ணங்களை மாற்றியமைத்து 
உடலை காயப்படுத்தி 
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி 
சொந்தங்களை தூரதள்ளி 
நம்பிக்கையை தன்வசப்படுத்தி 

என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து 
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு 



மீண்டும் விதையாகி, வேருன்றி, 
கிளையிடத் துவங்கிவிட்டேன்...

No comments:

Post a Comment

Popular Posts